Leo Valaipechu Bismi Review: "விஜய் இப்படியொரு படம் பண்ணலாமா..?” லியோ வலைப்பேச்சு பிஸ்மி விமர்சனம்
சென்னை: நேற்று வெளியான விஜய்யின் லியோவுக்கு பாக்ஸ் ஆபிஸில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.
ஆனால், இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
விஜய்யின் ஆக்டிங், லோகேஷின் மேக்கிங் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதலாக அமைந்துள்ளது.
இந்நிலையில், லியோ படத்துக்கு வலைப்பேச்சு பிஸ்மி கொடுத்துள்ள விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

லியோ வலைப்பேச்சு பிஸ்மி விமர்சனம்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்த திரைப்படம் லியோ. கோலிவுட் ரசிகர்களால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் நேற்று வெளியானது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் ரிலீஸான லியோவுக்கு நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது. முதல் நாளில் மட்டும் 140 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்துக்கு வலைப்பேச்சு பிஸ்மி கலவையான விமர்சனம் கொடுத்துள்ளார்.
அதில், லியோ படத்தின் கதையில் பெரிதாக ஒன்றும் இல்லை என்றும், இது ரஜினியின் பாட்ஷா டைப் என்றே கூறியுள்ளார். அதேநேரம் திரைக்கதையில் லோகேஷ் கொஞ்சம் வித்தியாசம் காட்டியுள்ளதாகவும், விஜய் தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி வந்து நடித்துள்ளது பாராட்டுக்குரியது எனவும் தெரிவித்துள்ளார். இன்ட்ரோ சாங், மாஸ் என்ட்ரி சீன்ஸ் இல்லாமல் விஜய் நடித்ததை பாராட்டியுள்ளார்.
வழக்கமான மசலாத்தனமான விஜய்யை லியோவில் பார்க்க முடியவில்லை. அதேநேரம் லியோவில் சுவாரஸ்யம் எதுவும் இல்லாமல் பார்க்க சுமாராகவே இருக்கு எனக் கூறியுள்ளார். படத்தின் தொடக்க காட்சியில் விஜய்யின் அமைதியான வாழ்க்கை ரொம்பவே சலிப்பூட்டுவதாகவும், அதன்பின்னர் நடக்கும் மாற்றங்கள் ஓக்கே தான் என்றுள்ளார். இப்படியொரு கதையில் நடித்த விஜய், அதற்காக நிறைய மாறியுள்ளதும் நன்றாகவே தெரிகிறது.
லியோ படத்தின் கதை எந்த திசையில் செல்கிறது என்றே தெரியவில்லை. அதேபோல், வில்லன் கேரக்டரில் சஞ்சய் தத், அர்ஜுன் நடித்திருந்தாலும் அதில் எந்த தாக்கமும் இல்லை என்றுள்ளார். மிஷ்கின், சாண்டி மாஸ்டர் கேரக்டர்களை விட சஞ்சய் தத் டம்மியாக தெரிகிறார். ஆரம்பத்தில் சஞ்சய் தத்துக்கு ஓவர் பில்டப் கொடுத்துவிட்டு, பின்னர் அவரது பினிஷிங்கில் வெயிட்டே இல்லை. அர்ஜுன் கேரக்டரும் அப்படியே புஷ்வானமாகிவிடுகிறது என பிஸ்மி தெரிவித்துள்ளார்.
அதேபோல், விஜய் பார்த்திபனாக இருக்கும் போது, லியோ கேரக்டர் பற்றிய பிம்பம் செல்ஃப் எடுக்கவில்லை. ஆனால், அந்த சஸ்பென்ஸ்ஸை படத்தின் இறுதிவரை லோகேஷ் கொண்டு சென்றது தான் ஒரே ஆறுதல். முக்கியமாக இந்த கதையில் நரபலி என்ற விஷயம் தேவையே இல்லாத ஒன்று. அதேநேரம் லியோ மேக்கிங் பார்க்க ஹாலிவுட் படம் போல உள்ளது.

ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் கேமரா ஒர்க், அன்பறிவ் மாஸ்டர்களின் ஆக்ஷன்ஸ் சீன்ஸ் லியோவை ஹாலிவுட் தரத்தில் கொண்டு சென்றுள்ளது. அதேநேரம் படத்தில் இருக்கும் அதீத வன்முறை காட்சிகளை ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் வலைப்பேச்சு பிஸ்மி தனது விமர்சனத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். டெக்னிக்கலாக படம் மிரட்டலாக இருந்தாலும் கதை கொஞ்சம் வீக்காக இருந்தால் ரசிக்க முடியவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாநகரம், கைதி, விக்ரம் படங்களின் திரைக்கதையோடு ஒப்பிட்டால், லியோவில் லோகேஷ் கனகராஜ்ஜின் மேஜிக் சுத்தமாக எடுபடவில்லை எனவும் வலைப்பேச்சு பிஸ்மி குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











