Leo VidaaMuyarchi: "லியோ LCU-ல இருக்கு... விடாமுயற்சி ICU-ல இருக்கு.." தெறிக்கவிட்ட அஜித் ஃபேன்ஸ்!
சென்னை: நாளை வெளியாகும் லியோ திரைப்படத்துக்கு விஜய் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் LCU-ன் கீழ் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இதனால் உற்சாகமான விஜய் ரசிகர்கள் லியோ, LCU, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இதனையடுத்து அஜித் ரசிகர்களும் தற்போது ரைமிங்காக பஞ்ச் வைத்து மாஸ் காட்டியுள்ளனர்.
லியோ LCU-ல இருக்கு... விடாமுயற்சி ICU-ல இருக்கு
விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு இரண்டும் இந்த ஆண்டு பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகியிருந்தன. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பின்னர் விஜய் - அஜித் படங்கள் ஒரேநாளில் வெளியாகி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்தன. அதேபோல், இந்த இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட் அடித்ததோடு, பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிகளுக்கும் மேல் வசூலித்தன.
இதனால் விஜய்யின் லியோவும் அஜித்தின் ஏகே 62 திரைப்படமும் மீண்டும் ஒன்றாக ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விஜய்யின் லியோ படப்பிடிப்பு அசுர வேகத்தில் முடிவுக்கு வந்ததால், சொன்னபடி நாளை வெளியாகிறது. ஆனால், அஜித்தின் ஏகே 62, விடாமுயற்சி என்ற டைட்டிலில் இப்போதுதான் படப்பிடிப்பை தொடங்கியுள்ளது. இருப்பினும் இந்தப் படத்தின் ஷூட்டிங் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இரு தினங்களுக்கு முன்னர் விடாமுயற்சி படத்தின் ஆர்ட் டைரக்டர் மிலன் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. அஜித்தின் நெருங்கிய நண்பரான மிலன், பில்லா, வீரம், வேதாளம், துணிவு ஆகிய படங்களிலும் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்துள்ளார். இதன் காரணமாக தான் விடாமுயற்சி ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளதாம்.

இந்நிலையில், விஜய்யின் லியோ திரைப்படம் லோகேஷின் சினிமாட்டிக் யூனிவர்ஸில் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தளபதியின் ரசிகர்கள் தாறுமாறான உற்சாகத்தில் மிதக்கின்றனர். LCU கான்செப்ட் மூவியில் விஜய் இணைந்துள்ளது லியோ மீதான எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைத்துள்ளது. இதனையடுத்து விஜய்யின் லியோ LCUல் தெறிக்கும் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.
இதனால் விரக்தியான அஜித் ரசிகர்கள் ரைமிங்காக மீம்ஸ் கிரியேட் செய்து வைரலாக்கி வருகின்றனர். அதில், "எங்க படம் LCU-ல இருக்கு... எங்க படம் ICU-ல இருக்கு" என கேப்ஷன் போட்டு ட்ரோல் செய்துள்ளனர். அதாவது விஜய்யின் லியோ LCU ஜானர் என்றால், அஜித்தின் விடாமுயற்சி ICU எனும் கிரிட்டிக்கல் ஸ்டேஜில் இருப்பதாக அவர்களே நக்கல் செய்துள்ளனர். இந்த மீம்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











