Leo: லியோவில் இருந்து லீக்கான விஜய்யின் ஃபேமிலி போட்டோ... எல்லா சர்ஃப்ரைஸ்ஸும் சோலி முடிஞ்சு!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

லியோ ட்ரெய்லரை தொடர்ந்து படத்தின் மூன்றாவது பாடல் இன்று வெளியாகிறது.

இந்நிலையில், லியோ படத்தில் இருந்து விஜய்யின் ஃபேமிலி போட்டோ லீக்காகி வைரலாகியுள்ளது.

 Leo: Vijay and Trisha posters leaked from Leo film

லியோவில் இருந்து லீக்கான விஜய் போஸ்டர்
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படத்துக்கு தாறுமாறான எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லலித் குமாரின் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

லியோ வரும் 19ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், கடந்த வாரம் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து லியோ மூன்றாவது சிங்கிள் இன்று வெளியாகிறது. இதனிடையே இந்தப் படம் குறித்த பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி வருகின்றன. லியோ ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோர், லியோ உருவானது பற்றியும் பேசி வருகின்றனர்.

இதில் முக்கியமாக லியோ டைட்டில் கார்டு அனிமேஷனில் உருவாகியுள்ளதாகவும், இது விஜய் ரசிகர்களுக்கு செம்ம சர்ஃப்ரைஸ்ஸாக இருக்கும் எனவும் ரத்னகுமார் கூறியிருந்தார். அதாவது லியோ டைட்டில் கார்டில் 'தளபதி விஜய்'-இன் பெயர், அவரது போட்டோவுடன் 2டி அனிமேஷனில் உருவாகியுள்ளதாம். ஆனால், இந்த டைட்டில் கார்டு இரு தினங்களுக்கு முன்னர் இணையத்தில் வைரலானது.

அதனைத் தொடர்ந்து லியோவில் இருந்து இன்னொரு முக்கியமான போஸ்டரும் லீக்காகியுள்ளது. இந்தப் படத்தில் லியோ, பார்த்திபன் என இரண்டு கேரக்டர்களில் விஜய் நடித்திருப்பதாக ட்ரெய்லரில் காட்டப்பட்டது. அதேபோல், விஜய்யும் த்ரிஷாவும் கணவன், மனைவியாக நடித்துள்ளதும் உறுதியானது. அவர்களுக்கு மகள் இருப்பதை போன்றும் ட்ரெய்லரில் காட்டியிருந்தார் லோகேஷ்.

 Leo: Vijay and Trisha posters leaked from Leo film

இதில் இன்னொரு சர்ப்ரைஸ்ஸாக மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், விஜய்யின் மகனாகவோ அல்லது தம்பியாகவோ நடித்திருக்கலாம் எனத் தெரிகிறது. லியோ ட்ரெய்லரில் இல்லாத இரண்டு போட்டோக்கள் ட்ரெண்டாகி வருகின்றன. அதில் ஒன்றில் விஜய்யும் த்ரிஷாவும் செம்ம ஸ்டைலிஷாக பைக்கில் செல்கின்றனர். இன்னொன்றில் விஜய், த்ரிஷா, மேத்யூ தாமஸ், குழந்தை நட்சத்திரம் என ஃபேமிலி போட்டோவாகும்.

இந்த இரண்டு போட்டோஸும் லியோவில் இருந்து லீக்காகி, படக்குழுவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் இந்த போட்டோஸ் மூலம் லியோவின் கதை, விஜய்யின் கேரக்டர் ஆகியவை இப்படித்தான் இருக்கும் என ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X