Leo: "ரஜினி ஃபேன்ஸ் மனநிலை பாதிக்கப்பட்டவங்க..” லியோ வைப்... தளபதி ரசிகரின் Thug Life செய்கை!!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் வெளியான லியோவுக்கு தரமான ஓபனிங் கிடைத்துள்ளது.
இந்தப் படம் இரண்டே நாட்களில் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே லியோ படத்திற்கு ரஜினி ரசிகர்களிடம் இருந்து நெகட்டிவான விமர்சனங்களே கிடைத்துள்ளன.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர் ஒருவர் தக் லைஃப் சம்பவம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது.

தளபதி ரசிகரின் Thug Life செய்கை
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ திரைப்படம் 19ம் தேதி வெளியானது. பான் இந்தியா படமாக உலகம் முழுவதும் ரிலீஸான லியோ, இரண்டே நாட்களில் 200 கோடி வசூலை கடந்துவிட்டது. இதனால் விஜய் உட்பட லியோ படக்குழுவினர் உற்சாகமாக உள்ளனர். அதேநேரம் இந்தப் படத்துக்கு நெகட்டிவான விமர்சனங்களும் கிடைத்துள்ளன.
முக்கியமாக சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் லியோ படத்தை இன்ச் பை இன்ச்சாக ட்ரோல் செய்து வருகின்றனர். விஜய் கேரியரில் லியோ தான் மிகப் பெரிய டிசாஸ்டர் மூவி என விமர்சனம் செய்திருந்தனர். அதேபோல், லியோ ரிலீஸான போது 'Leo Disaster' என்ற ஹேஷ் டேக்கும் டிவிட்டரில் ட்ரெண்ட் ஆனது. இதற்கும் ரஜினி ரசிகர்கள் தான் காரணம் என தளபதி ஃபேன்ஸ் கடுப்பில் இருந்தனர்.

ரஜினியின் ஜெயிலர் முதல் நாளில் 100 கோடி ரூபாய் வசூலித்தது. ஆனால், விஜய்யின் லியோ முதல் நாளில் 148 கோடி ரூபாய் கலெக்ஷன் செய்துள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது. இதனால், விஜய் தான் பாக்ஸ் கிங் என அவரது ரசிகர்கள் அட்ராசிட்டி செய்து வருகின்றனர். அதேநேரம் ஜெயிலர் படத்தின் மொத்த வசூலை லியோ நெருங்க முடியாது என தலைவர் ரசிகர்கள் களத்தில் இறங்கியுள்ளனர்.
அதுமட்டும் இல்லாமல் தலைவர் 170, தலைவர் 171 என அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் இருப்பதாகவும், அதற்கு முன்னால் விஜய்யின் லியோ தாக்குப்பிடிக்காது என்றும் கலாய்த்து வந்தனர். இந்நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக விஜய் ரசிகர் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் லியோ நல்லா இல்லை என சொல்லும் ரஜினி ரசிகர்கள் மனநிலை பாதிக்கப்பட்டவங்க என ஒரே போடாக போட்டுள்ளார்.

அதாவது, "லியோ திரைப்படம் நல்ல இருக்கு என சொன்னால், எங்களை விஜய் ரசிகர்கள் என கார்னர் செய்வதாகவும். இந்தப் படத்தை ரஜினி ரசிகர்களுக்கு போட்டுக் காட்ட வேண்டும்" எனவும் கூறியுள்ளார். மேலும், "லியோ நல்லா இருக்கு என சொன்னால், ரஜினி ரசிகர்கள் மனநிலை நல்லா இருக்கும்... நல்லா இல்லை என சொன்னால்... அங்களோட மனநிலை நல்லா இல்லைன்னு அர்த்தம்" என பங்கமாக தக் லைஃப் செய்துள்ளார். தரமான சம்பவம் செய்துள்ள தளபதி ரசிகரின் இந்த வீடியோ, டிவிட்டரில் செம்மையாக வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











