Leo: “த்ரிஷாவுடன் ரொமான்ஸ், டூயட்..” லியோ படப்பிடிப்பில் விஜய் - லோகேஷ் மோதலா..? இதுதான் உண்மை!!

சென்னை: விஜய் தற்போது லியோ படத்தை முடித்துவிட்டு தளபதி 68ல் நடிக்க ரெடியாகிவிட்டார்.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ அக். 19ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

ஆனால், விஜய் - லோகேஷ் கனகராஜ் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் லியோ ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இந்த சர்ச்சை குறித்தும் லியோ ரிலீஸ் பற்றியும் தற்போது உண்மையான நிலவரம் குறித்து தெரியவந்துள்ளது.

 Leo: Vijay-Lokesh conflict on the sets of Leo is revealed to be a rumour

விஜய் - லோகேஷ் இடையே மோதலா?: விஜய் தற்போது தளபதி 68 படத்தில் தனது கவனத்தை செலுத்தி வருகிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. தளபதி 68 படத்துக்காக விஜய், வெங்கட் பிரபு, அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் அமெரிக்கா சென்றிருந்தனர். இன்னொரு பக்கம் விஜய்யின் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்தும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. 7 ஸ்கீரின் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதனால் லியோ இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. ஆனாலும், இன்னும் இசை வெளியீட்டு விழா தேதி அறிவிக்கப்படவில்லை.

இதற்கு காரணம் விஜய் - லோகேஷ் இடையே ஏற்பட்ட மோதல் தான் என சொல்லப்பட்டது. அதாவது, லியோ படத்தில் த்ரிஷாவுடன் ரொமான்ஸ் காட்சிகளும் ஒரு டூயட்டும் வைக்க வேண்டும் என லோகேஷிடம் விஜய் கூறியிருந்தாராம். இதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்ட லோகேஷ், லியோவில் இருந்து விலகிவிட்டதாகவும், மீதமிருக்கும் பணிகளை இயக்குநர் ரத்ன குமார் தான் பார்த்து வருவதாகவும் செய்திகள் வெளியாகின.

அதனால் தான் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை என சொல்லப்பட்டது. ஆனால், விஜய் - லோகேஷ் இடையே எந்த மோதலும் இல்லையெனவும், இந்த தகவல்கள் முற்றிலும் போலியானது எனவும் தற்போது தெரியவந்துள்ளது. நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வந்த இந்த செய்தியை, லியோ படக்குழுவினரே மறுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டும் இல்லாமல் லியோ ரிலீஸ் தேதியில் எந்த மாற்றமும் இல்லையென சொல்லப்படுகிறது. ஏற்கனவே அறிவித்தபடி, அக்டோபர் 19ம் தேதி லியோ ரிலீஸாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே ரஜினியின் தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளது உறுதியாகியுள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் அபிஸியல் அப்டேட் சில மணிநேரங்களுக்கு முன்னர் வெளியானது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X