Leo Vijay: ”வருங்கால CM-ன்னு கூட பார்க்காம என்னய்யா இது?” விஜய்ண்ணாவுக்கு வந்த சோதனைய பாருங்க!
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ கடந்த மாதம் வெளியானது.
லோகேஷின் LCU-ன் கீழ் உருவான இந்தப் படத்துக்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தன.

அதேநேரம், எதிர்பார்த்த அளவிற்கு இல்லையென நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், லியோவில் வரும் விஜய்யின் ஆக்ஷன் காட்சியை ஜெயம் படத்தின் பாடலுடன் எடிட் செய்து கலாய்த்துள்ளனர்.
வருங்கால CM விஜய் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய லியோ படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. அதன்படி கடந்த மாதம் 19ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் இருந்தது. அதன்பின்னர் நெகட்டிவான விமர்சனங்கள் காரணமாக பாக்ஸ் ஆபிஸில் தடுமாறியது லியோ. இருப்பினும் மொத்தமாக 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
இதனிடையே லியோ படத்தின் சக்சஸ் மீட் கடந்த வாரம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய விஜய், தனது அரசியல் வருகை குறித்து மறைமுகமாக லீட் கொடுத்திருந்தார். 2026ல் கப்பு முக்கியம் பிகிலு என விஜய் பேசியது மிகப் பெரியளவில் வைரலானது. இதனால் விரைவில் விஜய் அரசியலில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் லியோ வெளியாகி இரண்டு வாரங்களை கடந்த பின்னரும், இப்படத்தின் சில காட்சிகள் ட்ரோல் செய்யப்பட்டு வருகின்றன. க்ளைமேக்ஸ் காட்சியில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான சண்டைக் காட்சி, திரையரங்குகளில் ரசிகர்களுக்கு வைப் கொடுத்திருந்தது. அதில் விஜய் செயின் ஒன்றில் தொங்கியபடி ரவுடிகளை பந்தாடுவார். இந்த காட்சியை நெட்டிசன்கள் பங்கமாக கலாய்த்துள்ளனர்.
அதாவது ஜெயம் படத்தில் சதாவை சந்திக்க கையிறு கட்டி அவரது வீட்டிற்குள் பறவை போல பறப்பார் ஜெயம் ரவி. அப்போது வரும் 'கவிதையே தெரியுமா' என்ற பாடலை, விஜய்யின் ஆக்ஷன் சீனுடன் எடிட் செய்து, காமெடி கலாட்டா செய்துள்ளனர். இந்த வீடியோவை தனது டிவிட்டரில் ஷேர் செய்துள்ள வலைப்பேச்சு அந்தணன், "என்னட பண்ணி வச்சிருக்கிங்... வருங்கால CMன்னு கூட பார்க்காம" என ட்ரோல் செய்துள்ளார்.
ஏற்கனவே விஜய் அரசியலுக்கு வருவது குறித்து அதிகமான ட்ரோல்கள் வைரலாகி வரும் நிலையில், தற்போது வலைப்பேச்சு அந்தணனும் பங்கம் செய்துள்ளார். விஜய்யின் ஆக்ஷன் சீனுக்கும் கவிதையே தெரியுமா பாடலுக்கும் செம்மையாக சிங்க் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











