Leo: விஜய்க்கு விட்டுக் கொடுப்பாரா அனிருத்... ரசிகர்களை குழப்பும் லியோ அப்டேட்!
சென்னை: விஜய் நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறதாம்.
இதில் 2000 டான்ஸர்களுடன் விஜய் நடிக்கும் ஒரு பாடல் காட்சி படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.
லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக உருவாகும் இந்தப் பாடல் குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்க்கு விட்டுக் கொடுப்பாரா அனிருத்:விஜய் கேரியரில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியாகிறது. இதனால், இன்னும் ஓரிரு மாதங்களில் லியோ படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் 2 மாதங்களாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படப்பிடிப்பில், ஒரு பாடல் காட்சியை படமாக்கி வருகிறார்களாம். ஆதித்யா ராம் பிலிம் சிட்டியில் 2000 பேருடன் விஜய் டான்ஸ் ஆடும் பிரம்மாண்டமான பாடல் காட்சியை ஷூட் செய்து வருகிறார் லோகேஷ். இந்தப் பாடலுக்கு விஜய்யின் ஃபேவரைட் டான்ஸ் மாஸ்டர் தினேஷ்குமார் கோரியோகிராபி செய்து வருகிறார்.
இந்த அப்டேட்கள் ஏற்கனவே வெளியான நிலையில், தற்போது இன்னொரு முக்கியமான தகவல் கிடைத்துள்ளது. அதன்படி இந்தப் பாடல் தான் லியோவின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. மேலும், ஜோர்த்தாலே பாடல், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அசல் கோளாறு, இந்தப் பாடலை எழுதியுள்ளாராம். அதேபோல், அவரும் அனிருத்தும் இணைந்து பாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

அதேநேரம் ரசிகர்களுக்காக விஜய் குரலில் இந்தப் பாடலை ரெக்கார்ட் செய்யலாம் என லோகேஷ் & டீம் முடிவு செய்துள்ளதாம். மாஸ்டர் படத்திலும் விஜய் பாடிய பாடலுக்கு நல்ல ரீச் இருந்தது. அதனால் லியோவில் விஜய் குரலில் ஒரு பாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என படக்குழு முடிவு செய்துள்ளது. ஆனால், ஏற்கனவே அனிருத், அசல் கோளாறு பாடிய வெர்ஷனை வைத்து தான் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் ஷூட்டிங் நடைபெற்று வருகிறதாம்.
அதனால், விரைவில் விஜய்யும் இந்தப் பாடலை பாடவுள்ளதாகவும், அவரது குரலிலேயே லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விஜய்க்காக அனிருத் இதைகூட விட்டுக்கொடுக்க மாட்டாரா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனால் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் செம்ம மஜாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னொரு பக்கம் விஜய் பிறந்தநாளில் லியோ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக அந்த கிளிம்ப்ஸ் வீடியோவுக்கு கமல் வாய்ஸ் ஓவர் கொடுத்துள்ளதாகவும் கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











