Vijay Ajith: “வாரிசுக்கு எதிரா துணிவு ரிலீஸான மாதிரி லியோவுக்கு ஆகிடக் கூடாது..” விஜய் போட்ட ஆர்டர்

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு கடந்த மாதம் 19ம் தேதி ரிலீஸானது.

போட்டிக்கு வேறு எந்த படங்களும் இல்லாமல் சோலோவாக வெளியான லியோ 550 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.

இந்நிலையில், லியோ ரிலீஸ் தேதி குறித்து விஜய் முன்னதாகவே கண்டிஷன் போட்டதாக லலித் குமார் கூறியுள்ளார்.

வாரிசுக்குப் போட்டியாக அஜித்தின் துணிவு வெளியானதை போல, லியோவுக்கு சிக்கல் வந்துவிடக் கூடாது என விஜய் உறுதியாக இருந்தாராம்.

 Leo: Vijay ordered that Leo should not face any problem like Thunivu release against Varisu

லலித் குமாருக்கு விஜய் போட்ட ஆர்டர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த லியோ திரைப்படம், அக்டோபர் 19ம் தேதி ரிலீஸானது. 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் லலித் குமார் இந்தப் படத்தை தயாரித்திருந்தார். 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் இதுவரை 550 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துவிட்டது.

இதன் தொடர்ச்சியாக லியோ வெற்றி விழாவும் சென்னை நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது. இந்தாண்டு ஜனவரி மாதம் இறுதியில் தொடங்கிய லியோ படப்பிடிப்பை 120 நாட்களில் முடித்து, சொன்னபடி ரிலீஸ் செய்தார் லோகேஷ் கனகராஜ். முன்னதாக ஷூட்டிங் தொடங்கும் போதே, லியோ படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டது.

குறைவான நாட்கள் மட்டுமே இருப்பதால், லியோ சொன்ன தேதியில் ரிலீஸாகுமா என பலரும் சந்தேகத்தில் இருந்தனர். ஆனால், அதே தேதியில் ரிலீஸாகி இப்போது பாக்ஸ் ஆபிஸிலும் மாஸ் காட்டியுள்ளது. இதுபற்றி பேசியிருந்த தயாரிப்பாளர் லலித் குமார், ரிலீஸ் தேதியுடன் லியோ அப்டேட்டை வெளியிட விஜய் தயங்கியதாகக் கூறியுள்ளார்.

அதாவது விஜய்யின் வாரிசு பொங்கலுக்கு வெளியானது. அப்போது அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியானதால், அதிகமான தியேட்டர்ஸ் கிடைப்பதிலும், பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சில சிக்கல்கள் ஏற்பட்டன. அதனால், லியோவுக்கு அதுமாதிரி பிரச்சினைகள் இருக்கக் கூடாது, முக்கியமாக சோலோவாக தான் லியோ ரிலீஸாக வேண்டும் என விஜய் ஆர்டர் போட்டிருந்ததாக லலித் குமார் தெரிவித்துள்ளார்.

ஆனால், லியோ சிங்கிளாக வெளியாகியும் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லையே என அஜித் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லியோ திரைப்படம் கோலிவுட் பாக்ஸ் ஆபிஸில் முதல் ஆயிரம் கோடி வசூல் சாதனை படைக்கும் என சொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X