Leo: லியோ ஃபைனல் வெர்ஷன் பார்த்த விஜய்... “லோகேஷ் ஏமாற்றவில்லை..” தளபதி கொடுத்த அந்த ரியாக்ஷன்!
சென்னை: விஜய்யின் லியோ படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தின் முதல் பாதியை பார்த்துவிட்டதாக தயாரிப்பாளர் லலித் குமார், சில தினங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அவரைத் தொடர்ந்து நாயகன் விஜய்யும் லியோ படத்தை முழுவதுமாக பார்த்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

லியோ பார்த்துவிட்டு விஜய் கொடுத்த ரியாக்ஷன்: விஜய் நடிப்பில் கடைசியாக வாரிசு திரைப்படம் வெளியானது. இந்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸான வாரிசு, ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பைப் பெற்றது. அதேநேரம், பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. வாரிசு படத்திற்கும் சேர்த்து, தரமான ட்ரீட் கொடுக்க ரெடியாகிவிட்டார் விஜய். அதன்படி அவர் நடித்துள்ள லியோ திரைப்படம், அடுத்த மாதம் வெளியாகவுள்ளது.
இந்தப் படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு தாறுமாறாக எகிறிப் போயுள்ளது. விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பின்னர், இனி தான் இயக்கும் படங்கள் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் இருக்கும் என லோகேஷ் கூறியிருந்தார். அதன்படி, விஜய்யின் லியோவும் லோகேஷின் LCU-இல் இணைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதேநேரம், விஜய்யின் லியோ, விக்ரம் படத்தின் முந்தைய போர்ஷனா அல்லது, அதன் சீக்வெல்லா என்பது இன்னும் தெரியவில்லை.
இந்நிலையில், கடந்த 4 தினங்களாக லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. அதேபோல் தினமும் ஒரு லியோ அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லியோ படத்தை விஜய் பார்த்துவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய் சேதுபதியின் மகாராஜா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீட்டு விழாவில், தயாரிப்பாளர் லலித் குமார் பங்கேற்று இருந்தார்.
அப்போது லியோ முதல் பாதியை தான் பார்த்துவிட்டதாகவும், படம் செம்மையாக வந்துள்ளதாகவும் கூறியிருந்தார். அவருக்குப் பின்னர் லியோ படத்தை விஜய்க்கு முழுவதுமாக போட்டுக் காட்டியுள்ளார் லோகேஷ். சென்னையில் உள்ள பிரபலமான தனியார் நட்சத்திர விடுதியில் தான், லியோ எடிட்டிங் வேலைகள் நடைபெற்று வருகின்றன. அங்கேயே விஜய்யை அழைத்து லியோ படத்தை போட்டுக் காட்டியுள்ளார்.
அதன்படி, லியோ ஃபைனல் வெர்ஷனை பார்த்த விஜய், லோகேஷை கட்டிப் பிடித்து பாராட்டியதாக சொல்லப்படுகிறது. படம் நிச்சயம் ப்ளாக் பஸ்டர் ஹிட் தான் என விஜய்யே நம்பிக்கையுடன் பேசியுள்ளாராம். அதேபோல், லோகேஷ் தன்னை ஏமாற்றவில்லை எனவும், விஜய் நெகிழ்ச்சியாக பேசியுள்ளார். விஜய்யே லியோ படத்திற்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளதால், இனி ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











