Leo: பஞ்சாயத்துடன் தொடங்கிய லியோ ப்ரோமோஷன்... விஜய் திருந்தவே மாட்டாரா... சர்ச்சையான போஸ்டர்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ திரைப்படம் அக்டோபர் மாதம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோ, ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் முதல் பாடல் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

இந்த அப்டேட்டுடன் வெளியான போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது கடும் சர்ச்சையாகியுள்ளது.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஜய்:விஜய் நடித்து வரும் லியோ படத்திற்கு கோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இப்படத்தில் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டும் இல்லாமல் மாஸ்டருக்குப் பின் விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் இணைவது ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக அமைந்துள்ளது.

 Leo: Vijays smoking photo in Leo first single poster is controversial

லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகும் லியோ படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. முதற்கட்ட படப்பிடிப்பை காஷ்மீரில் முடித்துவிட்ட லோகேஷ், தற்போது சென்னை ஷெட்யூலை நிறைவு செய்யவுள்ளார். இன்னும் சில தினங்களில் லியோ படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ விஜய் பிறந்தநாளில் வெளியாகும் என சொல்லப்பட்டது.

ஆனால், அது கிளிம்ப்ஸ் இல்லை, லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் தான் என்பது நேற்று உறுதியாகிவிட்டது. "என்ன ரெடியா?" என லோகேஷ் கனகராஜ் ட்வீட் செய்ய, 'நான் ரெடி' என விஜய் ரீ-ட்வீட் செய்து அப்டேட் கொடுத்தார். அதன்படி 'நான் ரெடி' என்ற பாடல் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளாக வெளியாகிறது. அனிருத் இசையமைத்துள்ள இந்தப் பாடல் விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இதற்காக ஸ்பெஷலான போஸ்டரையும் படக்குழு வெளியிட்டது.

அந்த போஸ்டரில் விஜய் புகைப்பிடித்துக்கொண்டு ஸ்டைலாக போஸ் கொடுத்துள்ளார். ஒருபக்கம் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட்டை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே நேரம் பலரும் விஜய்யின் போஸ்டருக்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். போஸ்டரில் விஜய் புகைப்பிடிப்பது தான் இந்த எதிர்ப்புக்கும் சர்ச்சைக்கும் காரணமாகியுள்ளது. விஜய் போன்ற டாப் ஹீரோஸ் இப்படி பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளலாமா என கேட்டு வருகின்றனர்.

இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் ட்வீட் செய்துள்ளார். அதில் நடிகர் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதை தவிர்க்க வேண்டும்! லியோ திரைப்படத்தின் முதல் அறிவிப்பில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சி இடம் பெற்றிருப்பது வருத்தமளிக்கிறது. விஜய் நடிக்கும் படங்களை குழந்தைகளும் மாணவர்களும் பார்க்கின்றனர். அவர் புகைப்பிடிக்கும் காட்சியில் நடிப்பதைப் பார்த்து அவர்களும் அப்பழக்கத்திற்கு ஆளாகிவிடக் கூடாது எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், புகைப்பழக்கத்திலிருந்து பொதுமக்களைக் காக்கும் சமூகப் பொறுப்பும் அவருக்கு உண்டு. சட்டமும் அதைத் தான் சொல்கிறது. எனவே, விஜய் கடந்த 2007, 2012-ஆம் ஆண்டுகளில் உறுதியளித்ததைப் போலவே திரைப்படங்களில் புகைப்பிடிக்கும் காட்சிகளில் நடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என பதிவிட்டுள்ளார். முன்னதாக அழகிய தமிழ் மகன், துப்பாக்கி, சர்கார் படங்களில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அப்போதும் அன்புமணி ராமதாஸ் நடிகர் விஜய்க்கு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

லியோ போஸ்டர் விவகாரம் கடும் சர்ச்சையான நிலையில், ரசிகர்கள் உட்பட பலரும் விஜய்யின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். விஜய் ரசிகர்கள் சிலரே அவர் புகைப்பிடிக்கும் காட்சி தேவையில்லாதது என விமர்சித்து வருகின்றனர். இதனால் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது படத்தில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. லியோ ஃபர்ஸ்ட் சிங்கிள் நெகட்டிவான ப்ரோமோஷனுடன் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X