Leo: லியோ ஃபைனல் வெர்ஷன் பார்த்த விஜய்... லோகேஷை கட்டிப்பிடித்து சொன்ன அந்த ஒரு வார்த்தை!!

சென்னை: விஜய்யின் லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் முடிந்துவிட்டதாம்.

இதனையடுத்து லியோ படத்தின் ஃபைனல் வெர்ஷனை விஜய், லோகேஷ் கனகராஜ், லலித் குமார் ஆகியோர் பார்த்துள்ளனர்.

 Leo: Vijay thanked Lokesh Kanagaraj after watching the Leo

அதன்பின்னர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜை கட்டிப்பிடித்த விஜய், கடைசியாக ஒருவார்த்தை சொல்லி அவரை கண் கலங்க வைத்துவிட்டாராம்.

லியோ ஃபைனல் வெர்ஷன் பார்த்த விஜய்

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் இந்த மாதம் 19ம் தேதி வெளியாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பான் இந்தியா படமாக ரிலீஸாகவுள்ள லியோவுக்கு, அனைத்து மொழி ரசிகர்களிடமும் எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லியோ ரிலீஸுக்கு இன்னும் 10 நாட்களே உள்ளதால், படத்தின் ப்ரொமோஷன் வேலைகளும் பிஸியாக நடந்து வருகின்றன.

இதில், லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோர் கலந்துகொண்டு வருகின்றனர். இன்னொரு பக்கம் லியோ படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளையும் லோகேஷ் முடித்துவிட்டாராம். ஒட்டுமொத்தமாக லியோ ஃபைனல் வெர்ஷன் முடிந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து தளபதி 68 ஷூட்டிங்கில் பிஸியாக இருந்த விஜய், லியோ படத்தை முழுவதுமாக பார்த்துள்ளார்.

விஜய், லோகேஷ் கனகராஜ், தயாரிப்பாளர் லலித் குமார், ரத்னகுமார் உள்ளிட்ட லியோ படக்குழுவின் முக்கியமான நபர்கள் மட்டும் தனியாக பார்த்துள்ளனர். 2 மணி நேரம் 43 நிமிடங்கள் வரை ஓடக்கூடிய ஃபைனல் வெர்ஷன் என்பதால், எடிட்டிங் உட்பட அனைத்திலும் லியோவை பக்காவாக செதுக்கிவிட்டாராம் லோகேஷ். அந்த திருப்தியில் லியோ படம் பார்த்துள்ளார் தளபதி விஜய்.

அதன்பின்னர் அருகிலிருந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ்ஜை பார்த்த விஜய், எழுந்துநின்று அவரை கட்டிப்பிடித்துவிட்டாராம். விஜய்யும் லோகேஷும் உணர்ச்சிகரமாக கட்டிப்பிடித்துக்கொண்டதைப் பார்த்த லியோ படக்குழுவினரும் உற்சாகத்தில் கை தட்டி மகிழ்ந்துள்ளனர். பின்னர் ரொம்பவே நெகிழ்ச்சியாக லோகேஷிடம் பேசிய விஜய், இறுதியாக 'நன்றி' என சிம்பிளாக கூறியுள்ளார்.

அப்போது விஜய்யின் முகத்தில் இருந்த அந்த சந்தோஷம், லோகேஷுக்கும் நெகிழ்ச்சியை கொடுத்துள்ளது. லியோ ட்ரெய்லருக்கு விஜய் கொடுத்த ரியாக்‌ஷனை விட, இப்போது இன்னும் கூடுதல் வைப் கிடைத்துள்ளதாக லோகேஷ் தனது குழுவினரிடம் கூறினாராம். லியோ ஃபைனல் வெர்ஷனில் விஜய்க்கு டபுள் ஓக்கே என்பதால், இனி பேட்ச் ஒர்க் கூட நடக்க வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. இதனால், இனி லியோ ப்ரொமோஷன் வேலைகள் மட்டுமே தீவிரமாக நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X