Leo: பைனல் ஸ்டேஜில் லியோ ஷூட்டிங்... விஜய் கிரேட் எஸ்கேப்... மதுரையன்ஸுக்கு குட் நியூஸ்!

சென்னை: தமிழில் தற்போது அதிக எதிர்பார்ப்புள்ள திரைப்படமாக உருவாகி வருகிறது விஜய்யின் லியோ.

லியோவில் விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.

இதனைத் தொடர்ந்து தரமான சில அப்டேட்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

லியோவில் இருந்து எஸ்கேப் ஆகும் விஜய்:கோலிவுட் இண்டஸ்ட்ரியையும் தாண்டி அதிக எதிர்பார்ப்பில் இருக்கும் படங்களில் ஒன்று லியோ. விஜய்யின் 67வது படமாக உருவாகும் லியோ அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய்யும் லோகேஷும் மீண்டும் இணைந்துள்ளதால் லியோ மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக காணப்படுகிறது.

 Leo: Vijay Will Finish Filming His Portions For The Leo Movie within one week

இந்த எதிர்பார்ப்பை எகிற வைக்கும் வகையில், விஜய் பிறந்த நாள் ஸ்பெஷலாக லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளை வெளியிட்டது படக்குழு. அனிருத் இசையில் விஜய் பாடிய 'நான் ரெட்' என்ற இந்தப் பாடல், ரசிகர்களுக்கு 24 மணி நேரமும் வைப் கொடுத்து வருகிறது. தினேஷ் மாஸ்டரின் கோரியோகிராபியில் 2000 டான்ஸ்டர்களுடன் மஜா செய்தார் தளபதி விஜய்.

இந்நிலையில், லியோ படப்பிடிப்பில் விஜய்யின் போர்ஷன் இன்னும் 5 அல்லது 6 தினங்களில் முடிவுக்கு வருகிறதாம். காஷ்மீரைத் தொடர்ந்து சென்னை படப்பிடிப்பில் பிஸியாக இருந்த விஜய், இறுதியாக தலகோனா பகுதியில் நடக்கும் ஷூட்டிங்கில் கலந்துகொள்ள உள்ளாராம். அத்துடன் அவரது போர்ஷன் முழுவதும் முடிவுக்கு வருவதாக சொல்லப்படுகிறது. அதன்பிறகு மற்ற நடிகர்களின் பகுதிகளை முடிக்க லோகேஷ் பிளான் செய்துள்ளாராம்.

ஜூன் மாதம் இறுதிக்குள் லியோ படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஜூலையில் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளை தொடங்க உள்ளாராம் லோகேஷ். அதோடு லியோ இசை வெளியீட்டு விழா குறித்தும் முக்கியமான முடிவு எடுத்துள்ளாராம் விஜய். இதுவரை விஜய்யின் பட விழாக்கள் அனைத்தும் சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டன. ஆனால், இந்தமுறை சென்னை இல்லாமல் மதுரை, திருச்சி அல்லது கோவையில் நடக்கலாம் என சொல்லப்பட்டது.

இதில், தற்போது மதுரையை டிக் செய்துள்ளாராம் விஜய். சுமார் 50,000 பேர் கூடும் வகையில் பெரிய மைதானத்தில் பிரம்மாண்டமாக நடத்த விஜய் திட்டமிட்டுள்ளாராம். இந்த இசை வெளியீட்டு விழாவில் விஜய்யின் அரசியல் பயணம் குறித்த அறிவிப்புகள் கண்டிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. லியோவில் விஜய்யின் போர்ஷன் முடிவுக்கு வருவதால், விரைவில் தளபதி 68 படப்பிடிப்பு தொடங்கும் எனக் கூறப்படுகிறது.

லலித் குமார் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், நரேன், ஜார்ஜ் மரியான், டான்ஸர் வசந்தி உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X