Leo: “Avengers அவதாரம் எடுத்த விஜய்..” லியோவில் தெறி மாஸ் சம்பவம் இதுதானா.. ட்ரெண்டாகும் போஸ்டர்!!

சென்னை: லியோ திரைப்படம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளதால் அடுத்தடுத்து அப்டேட்கள் வெளியாகி வருகின்றன.

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம் ஐமேக்ஸில் ரிலீஸாவதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

அதேபோல், விஜய்யின் கேரக்டர் குறித்தும், லியோ LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதா என்றும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், லியோவில் அவெஞ்சர்ஸ் அவதாரம் எடுத்த விஜய்யின் தெறிமாஸ் போஸ்டர் வைரலாகி வருகிறது.

 Leo: Vijays Avengers-style fan-made Leo poster is trending

அவெஞ்சர்ஸ் அவதாரம் எடுத்த விஜய்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் லியோ. முன்னதாக விஜய், லோகேஷ், அனிருத், லலித் குமார் காம்போவில் வெளியான மாஸ்டர், சூப்பர் ஹிட் அடித்தது. அதன் பின்னர் லோகேஷ் இயக்கிய விக்ரம், 2022ம் ஆண்டின் இண்டஸ்ட்ரி ஹிட் படமாக கொண்டாடப்பட்டது. அதனால், விஜய் - லோகேஷ் இணைந்துள்ள லியோ மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

லியோவில் விஜய்யுடன் மிகப் பெரிய நட்சத்திரப் பட்டாளத்தை களமிறக்கியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இதனால், விக்ரம் படத்தை விடவும் தரமான சம்பவங்கள் லியோவில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்தப் படத்தின் ட்ரெய்லரும் கடந்த வாரம் வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்நிலையில் லியோ ஐமேக்ஸில் ரிலீஸாகவிருப்பதாகவும் படக்குழு அபிஸியலாக அறிவித்தது.

லியோ ஐமேக்ஸ் அப்டேட் போஸ்டரில், விஜய்யின் போஸ்டர் செம்ம மாஸ்ஸாக இருந்தது. இப்போது அதனையும் தூக்கிச் சாப்பிடும் வகையில் இன்னொரு செம்ம கெத்தான போஸ்டர் வைரலாகி வருகிறது. அதாவது இந்த போஸ்டரில், கையில் வாளுடன் அவெஞ்சர்ஸ் ஹீரோ லுக்கில் தெறிக்கவிட்டுள்ளார் விஜய். ஹாலிவுட் ஹீரோக்களுக்கு சவால் விடும் வகையில் மாஸ் காட்டும் இந்தப் போஸ்டர், விஜய் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

அதேநேரம், இது ரசிகர்களால் உருவாக்கப்பட்ட ஃபேன்மேட் போஸ்டர் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விஜய்க்காக இந்த போஸ்டரை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். முன்னதாக லியோ ஃபேன் மேட் போஸ்டரை தனது மொபைல் ஸ்க்ரீன் சேவரில் வைத்திருந்தார் லோகேஷ். அந்தளவிற்கு லியோ ஃபேன்மேட் போஸ்டர்கள் வைரலாகி வருகின்றன. ஆனால் தற்போது வெளியான விஜய்யின் ஃபேன்மேட் போஸ்டர் செம்ம ஹைப் கொடுத்துள்ளது.

இதனிடையே படக்குழு தரப்பில் இருந்தும் அடுத்தடுத்து லியோ அப்டேட்ஸ் வெளியாகவுள்ளன. லியோ மூன்றாவது சிங்கிள், ஐமேக்ஸ் அபிஸியல் அப்டேட் வரிசையில், இன்னொரு முக்கியமான சம்பவம் வெளியாகும் என சொல்லப்படுகிறது. அது விஜய்யின் லியோ கேரக்டருக்கான க்ளிம்ப்ஸ் வீடியோவாக இருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X