Leo: “லியோ ஆடியோ லான்ச் திட்டமிட்டு கேன்சல் செய்யப்பட்டதா..? இது விஜய்யின் அரசியல் கணக்கு!!

சென்னை: விஜய்யின் லியோ பட இசை வெளியீட்டு விழா, நாளை (செப்.30) நடைபெறும் என சொல்லப்பட்டது.

ஆனால், இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு திடீரென அறிவித்தது.

Leo: Vijays Leo Audio Launch Event has been canceled as planned

விஜய்க்கு கொடுக்கப்பட்ட அரசியல் அழுத்தம் காரணமாக தான் ஆடியோ லான்ச் கேன்சல் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின.

ஆனால், விஜய் தான் லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டதாகவும், இதுவும் ஒரு அரசியல் தான் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

விஜய்யின் அரசியல் கணக்கு
விஜய் நடிப்பில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள லியோ, அடுத்த மாதம் திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். லியோ படத்தின் டீசர், ட்ரெய்லர் இன்னும் வெளியாகாத நிலையில், இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

அதன்படி, நாளை (செப்.30) சென்னை நேரு ஸ்டேடியத்தில் லியோ இசை வெளியீட்டு விழா நடக்கவிருந்தது. ஆனால், இரு தினங்களுக்கு முன்னர் திடீரென லியோ ஆடியோ லான்ச் கேன்சல் என படக்குழு அறிவித்தது. ரசிகர்கள் அதிகளவில் பாஸ் கேட்பதால், பாதுகாப்பு குளறுபடிகள் ஏற்பட்டுவிடலாம் என இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்படுவதாக படக்குழு தெரிவித்தது. மேலும், இதற்கு அரசியல் அழுத்தம் எதுவும் இல்லை என்றும் ஒருவரியில் விளக்கம் கொடுத்திருந்தது.

Leo: Vijays Leo Audio Launch Event has been canceled as planned

இதனையடுத்து ரசிகர்களும், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளும், விஜய்க்கு ஆதரவாக டிவிட்டரில் போஸ்ட் போட்டு ட்ரெண்ட் செய்தனர். உதயநிதி தான் விஜய்க்கு அரசியல் அழுத்தம் கொடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அது உண்மையில்லை என்றும், இசை வெளியீட்டு விழாவுக்கான டிக்கெட்டுகள் போலியாக அச்சடிக்கப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது தான் காரணம் எனவும் செய்திகள் வெளியாகின.

அதனால் தான் லியோ இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிடலாம் என விஜய் தரப்பு முடிவெடுத்தார்களாம். அதேநேரம், அரசியல் அழுத்தம் காரணம் இல்லை என படக்குழு விளக்கம் கொடுத்ததும் விஜய்யின் ஐடியா தான் என்று சொல்லப்படுகிறது. லியோ இசை வெளியீட்டு விழாவுக்கு விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு மட்டுமே அழைப்பு கொடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இதனால், அந்நிகழ்ச்சியில் விஜய் கண்டிப்பாக தனது அரசியல் என்ட்ரி குறித்து குட்டி ஸ்டோரி சொல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஒருவேளை அப்படி பேசினால் லியோ ரிலீஸுக்கு பிரச்சினை எழும் என விஜய் யோசித்துள்ளார். அதனால் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டு, அதனையே ரசிகர்கள் மத்தியில் வைரலாக்கி விட்டால், அது இன்னும் பப்ளிசிட்டியாக மாறிவிடும் என திட்டமிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தற்போது விஜய் ரசிகர்களை கடந்து பொதுமக்களிடமும் பேசுபொருளாகிவிட்டது. இதனால், விஜய் அரசியலுக்கு வரக் கூடாது என அவருக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக மக்களும் புரிந்துகொள்வார்கள் என்றே, அவர் இசை வெளியீட்டு விழாவை ரத்து செய்துவிட்டாராம். லியோ இசை வெளியீட்டு விழா நடந்தால் கூட அது ஒரு வாரம் தான் ட்ரெண்டிங்கில் இருந்திருக்கும். ஆனால், தற்போது லியோ இசை வெளியீட்டு விழா ரத்து என்ற பேச்சு, விஜய்யின் அரசியல் என்ட்ரிக்கு சப்போர்ட்டாக அமைந்துள்ளதாக வலைப்பேச்சு பிஸ்மியும் அந்தணனும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X