Leo: செப்டம்பர் இறுதியில் லியோ ஆடியோ லான்ச்... குட்டி ஸ்டோரியுடன் ரெடியான விஜய்!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.
இந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டதை அடுத்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
அதேநேரம் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதன்படி செப்டம்பர் மாதம் இறுதியில் லியோ இசை வெளியீட்டு விழாவை நடத்த விஜய் குட்டி ஸ்டோரியுடன் ரெடியாகி வருகிறாராம்.

குட்டி ஸ்டோரியுடன் ரெடியாகும் விஜய்: மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி லியோவில் இணைந்துள்ளது. இரண்டாவது முறையும் விஜய் - லோகேஷ் கூட்டணி அதிரிபுதிரியான சூப்பர் ஹிட் கொடுக்கும் என லியோ படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். கடந்த ஜனவரியில் தொடங்கிய லியோ ஷூட்டிங் 125 நாட்களில் நிறைவுப்பெற்றது.
இதனைத் தொடர்ந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் லோகேஷ் கனகராஜ். விரைவில் விஜய் தனது போர்ஷனுக்கு டப்பிங் கொடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக விஜய் பிறந்தநாளை முன்னிட்டு லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் வெளியானது. இந்தப் பாடல் ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும், இதில் விஜய் புகைப்பிடிக்கும் காட்சிகள் சர்ச்சையை கிளப்பின.
இதன் தொடர்ச்சியாக கடந்த வாரம் சஞ்சய்த் தத்தின் ஆண்டனி தாஸ் டீசர் வெளியானது. மேலும் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த விஜய் பிளான் செய்துள்ளாராம். விஜய் படங்களின் இசை வெளியீட்டு விழா எப்போதும் சென்னையில் நடைபெறும். ஆனால், இந்த முறை மதுரை, கோவை அல்லது திருச்சி என ஏதேனும் ஒரு ஊரில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான் தேதியையும் கன்ஃபார்ம் செய்துவிட்டாராம் விஜய். அதன்படி செப்டம்பர் 24ம் தேதி லியோ ஆடியோ லான்ச் நடைபெறும் என சொல்லப்படுகிறது. அக்டோபர் 19ம் தேதி படம் ரிலீஸாகவுள்ளதால், செப்டம்பர் இறுதியில் இசை வெளியீட்டு விழாவை முடித்துவிட திட்டமிட்டுள்ளார்களாம். இந்த விழாவில் விஜய் என்ன குட்டி ஸ்டோரி சொல்லப் போகிறார் என அதிகம் எதிர்பார்க்க வைத்துள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில், சூப்பர் ஸ்டார் டைட்டில் குறித்து ரஜினி பேசியிருந்தார். மேலும், காகம் - பருந்து என குட்டி ஸ்டோரியும் கூறியிருந்தார். இதெல்லாம் விஜய்யை அட்டாக் செய்ய தான் சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவின. அதனால், ரஜினியின் குட்டி ஸ்டோரிக்கு விஜய்யும் ஒரு கதை சொல்லி பஞ்ச் வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











