Leo: இன்று போஸ்டர் கிடையாது... பிளானை மாற்றிய லியோ டீம்... அடுத்த அப்டேட் இதுதானா..?

சென்னை: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது, லியோ படத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்தில் இருந்து, கடந்த 4 நாட்களாக விஜய்யின் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன.
லியோ ரிலீஸாகும் வரை கடைசி 30 நாட்களில் தினமும் அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கூறியிருந்தார். அதன்படி, இதுவரை விஜய்யின் போஸ்டர்களை வெளியிட்ட படக்குழு, இன்று இன்னும் மாஸ்ஸான அப்டேட்டை வெளியிட உள்ளதாம்.

 Leo: Vijays Leo audio launch update is expected today

லியோ அடுத்த அப்டேட் இதுதான் : மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்தது. அதன்படி இக்கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அடுத்த மாதம் 19ம் தேதி ரிலீஸாகிறது. அதேபோல், மாஸ்டரில் இணைந்த அனிருத், 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் நிறுவனமும், லியோவில் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் படம் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த கோலிவுட்டையும் எதிர்பார்க்க வைத்துள்ளது.

விஜய்யுடன் த்ரிஷா, ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், இயக்குநர்கள் கெளதம் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் லியோவில் நடித்துள்ளனர். பொன்னியின் செல்வனுக்குப் பிறகு, தமிழில் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக லியோ இருக்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம், லோகேஷின் LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ள லியோவில், சர்ப்ரைஸ்களுக்கு குறைவு இருக்காது என்பதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது.

இந்நிலையில், லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் வெளியாகும் என லோகேஷ் கனகராஜ் கூறியிருந்தார். அதாவது படம் வெளியாவதற்கு 30 நாட்கள் முன்பாக தினமும் அப்டேட் வெளியாகும் என லீட் கொடுத்திருந்தார். அதன்படி, லியோ படத்தில் இருந்து விஜய்யின் வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகின. இந்த போஸ்டர்கள் "KEEP CALM AND PREPARE FOR BATTLE" என்ற கேப்ஷனுடன் வெளியானது.

இதனால், இன்று என்ன போஸ்டர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அல்லது லியோ படத்தில் இருந்து வேறு அப்டேட் ஏதும் வெளியாகுமா என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இன்றைய லியோ அப்டேட் குறித்து சில தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, லியோ இசை வெளியீட்டு விழா அல்லது அது நடைபெறும் தேதி அறிவிக்கப்பட உள்ளதாம். பல நாட்களாகவே லியோ இசை வெளியீட்டு விழா பற்றி செய்திகள் வெளியாகி வருகின்றன.

அதன்படி, வரும் 30ம் தேதி சென்னை நேரு விளையாட்டு அரங்கில் லியோ இசை வெளியீட்டு விழா நடைபெறும் என சொல்லப்படுகிறது. இதனை கன்ஃபார்ம் செய்வதோடு, இசை வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளது யார் என்பது பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X