Leo FDFS: “லியோ FDFS... கடைசி நேரத்தில் வந்த சிக்கல்..” விரக்தியின் உச்சத்தில் விஜய் ரசிகர்கள்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.
லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தது.
இதனால், லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு, கடைசி நேரத்தில் ஏமாற்றமே கிடைத்துள்ளது.

லியோ FDFS நேரம் அறிவிப்பு
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம், ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகும் லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங், தமிழ்நாடு உட்பட பல ஏரியாக்களில் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இதனையடுத்து விஜய் ரசிகர்கள் உற்சாகமாக டிக்கெட் புக் செய்து வருகின்றனர்.
இதனிடையே லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்தது. அதாவது லியோ ரிலீஸாகும் 19ம் தேதி 2 சிறப்புக் காட்சிகள் உட்பட மொத்தம் 6 காட்சிகள் திரையிடலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்திருந்தது. அதேபோல் 20 முதல் 24ம் தேதி வரை, கூடுதலாக ஒரு சிறப்புக் காட்சி உட்பட மொத்தம் 5 காட்சிகள் திரையிடலாம் என அறிவிப்பு வெளியானது.
லியோ ஆடியோ லான்ச் திடீரென கேன்சல் ஆனதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், அந்த சர்ச்சைகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, லியோ சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதேநேரம் லியோ ரிலீஸாகும் முதல் நாளான 19ம் தேதி, FDFS ஷோ எத்தனை மணிக்கு திரையிடப்பட வேண்டும் என்பது தெளிவாக சொல்லப்படாமல் இருந்தது.

இதனால், லியோ FDFS அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என விஜய் ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருந்தனர். மேலும், திரையரங்குகளிலும் முதல் நாள் FDFS ஷோவுக்கான டிக்கெட் புக்கிங் ஓபனாகாமல் இருந்தது. இந்நிலையில், இந்த குழப்பங்களுக்கு முடிவு கட்டும் வகையில் தமிழ்நாடு அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் லியோ FDFS நேரம் பற்றி அறிவித்துள்ளது.
அதன்படி, லியோ படத்தின் முதல் ஷோ தமிழ்நாட்டில் காலை 9 மணிக்கு தான் திரையிடப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கடைசி காட்சி நள்ளிரவு 1.30 மணிக்குள் முடியும்படி இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், விஜய் ரசிகர்கள் கடும் விரக்தியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











