Leo: லியோ FDFS-க்கு பெரிய ஆப்பு... 9 மணி ஷோ கூட கேன்சல் தானா..? பிரபலம் சொன்ன ஷாக்கிங்!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் FDFS, ஸ்பெஷல் ஷோ இரண்டுக்கும் தமிழ் தமிழ்நாட்டில் அனுமதி இல்லை என சொல்லப்படுகிறது. தமிழ்நாட்டில் ஸ்பெஷல் ஷோவும் கேன்சல் செய்யப்பட்டுள்ளதால், லியோ 11 மணிக்கு தான் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லியோ FDFS-க்கு பெரிய ஆப்பு : விஜய்யின் லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பு காணப்படுகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ளதோடு, லியோ LCU கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் விஜய்யுடன் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, கெளதம் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.
மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகியுள்ள லியோ, கோலிவுட்டின் முதல் ஆயிரம் கோடி பாக்ஸ் ஆபிஸில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லியோ செகண்ட் சிங்கிள் உட்பட படத்தின் மற்ற அப்டேட்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன. இன்னொரு பக்கம் லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அதேபோல் லியோ ப்ரோமோஷனும் தாறுமாறாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், லியோ படத்தின் FDFS-க்கு தமிழ்நாட்டில் வாய்ப்பே இல்லை என சொல்லப்படுகிறது. வாரிசு, துணிவு படங்கள் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அப்போது ரோகிணி தியேட்டர் முன்பு ரசிகர் ஒருவர் லாரியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இதனால், தமிழ்நாட்டில் இனி அதிகாலை FDFS காட்சிகளுக்கு அனுமதி கிடையாது என அரசு அறிவித்துவிட்டது. சமீபத்தில் வெளியான ஜெயிலர் படத்துக்கும் அதிகாலை FDFS காட்சிகளுக்கு அனுமதி இல்லை.

இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் தனஞ்செயன், விஜய்யின் லியோ படத்துக்கு ஸ்பெஷல் ஷோ பெர்மிஷன் கூட கிடைக்காது எனக் கூறியுள்ளார். இது விஜய் ரசிகர்களிடம் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அதாவது விதிமுறைகளின் படி, காலை 11 மணி ஷோ தான் முதல் காட்சியாக உள்ளது. விஜய்யின் லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி FDFS, 9 மணி ஸ்பெஷல் ஷோ இந்த இரண்டுக்கும் அனுமதி கிடைப்பது கடினம் எனக் கூறியுள்ளார்.
லியோ அதிகாலை FDFS ஷோவுக்கு சுத்தமாக வாய்ப்பில்லை என்பதை மிக அழுத்தமாக கூறியுள்ளார் தயாரிப்பாளர் தனஞ்செயன். இதனால், விஜய் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர். அதேநேரம், ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் லியோ FDFS, அதிகாலை 4 மணிக்கு திரையிடப்படும் என சொல்லப்படுகிறது. கேரளாவில் நள்ளிரவு 1.30 மணிக்கு லியோ படத்தை திரையிட முடிவு செய்துள்ளார்களாம். இதனால் விஜய் ரசிகர்கள் இன்னும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











