Leo: “மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ..” அனல் தெறிக்கும் விஜய்யின் லியோ போஸ்டர்!
சென்னை: விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்த எதிர்பார்ப்பை இன்னும் எகிற வைக்கும் அளவில், கடந்த மூன்று தினங்களாக லியோ அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் தற்போது வெளியான லியோ போஸ்டர், விஜய் ரசிகர்களுக்கு செம்ம ஹைப் கொடுத்துள்ளது.

விஜய் ரசிகர்களுக்கு ஹைப் கொடுத்த போஸ்டர் : கோலிவுட் ரசிகர்களின் மாஸ் ஹீரோவான விஜய், தற்போது லியோ படத்தில் நடித்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தை செவன் ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் இந்தப் படம் லோகேஷின் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அதுமட்டும் இல்லாமல் இந்தப் படத்தில் விஜய்யுடன் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் என மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் காஸ்டிங் உடன் களமிறங்கியுள்ளார் லோகேஷ். இதனால் லியோ படத்தின் ஹைப் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்நிலையில், லியோ படத்தில் இருந்து தினமும் ஒரு அப்டேட் கொடுக்கும் வேலையை படக்குழு தொடங்கியுள்ளது.
துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் பங்கேற்ற லோகேஷ், லியோ வெளியாவதற்கு 30 நாட்கள் முன்பிருந்து படத்தின் அப்டேட் வரும் என்றிருந்தார். அதன்படி, முதல் இரண்டு போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகிவிட்டன. நேற்றைய தினம், விஜய் ஆண்டனியின் மகள் மறைவு காரணமாக, லியோ அப்டேட் வெளியாகவில்லை. இந்நிலையில், இன்று முதல் மீண்டும் லியோ போஸ்டர் திருவிழா தொடங்கியது.
தெலுங்கு, கன்னட போஸ்டர்களைத் தொடர்ந்து, இன்று லியோ தமிழ் போஸ்டர் வெளியாகியுள்ளது. வழக்கம் போல "KEEP CALM AND PREPARE FOR BATTLE" என்ற கேப்ஷனுடன், இந்த முறை "மிளக தட்டி முட்டி.. என்ன குக் பண்றீங்க ப்ரோ என்று கேட்ட அனைவருக்கும் அக்டோபர் 19 அன்று விருந்து" என செம்ம மாஸ்ஸாக அப்டேட் கொடுத்துள்ளது. முக்கியமாக விஜய்யின் ஆக்ரோஷமான லுக்கும் அவரது ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்துள்ளது.
இதுவரை வெளியான போஸ்டர்களிலேயே மாஸ் காட்டும் லியோ டீம், இனி வரும் நாட்களில் இதைவிட தரமான சம்பவங்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், லியோ கன்னட போஸ்டர் கோல்ட் பர்ஸ்யூட் என்ற ஹாலிவுட் படத்திலிருந்தும், தெலுங்கு போஸ்டர் ஆயுதம் படத்திலிருந்தும் காப்பி அடிக்கப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











