Leo: லியோ ஸ்பெஷல் ஷோ கேன்சல்..? No Cuts வெர்ஷனுடன் ரெடியான லோகேஷ்... இது என்ன புதுசா இருக்கே?

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள இந்தப் படம், இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், லியோ FDFS, ஸ்பெஷல் ஷோ இரண்டுக்கும் அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

இதனால், லியோ படத்தை 'நோ கட்ஸ்' வெர்ஷனுடன் வெளியிட லோகேஷ் பிளான் செய்துள்ளதாராம்.

 Leo: Vijays Leo film will be released with a Uncut version

நோ கட்ஸ் வெர்ஷனாக வெளியாகும் லியோ: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த மாதம் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய்யுடன் அர்ஜுன், த்ரிஷா, சஞ்சய் தத் என பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. பிரம்மாண்டமான பட்ஜெட், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படம் என லியோ மீதான எதிர்பார்ப்பில் விஜய் ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

அதுமட்டும் இல்லாமல் லியோ படத்தை LCU கான்செப்ட்டில் இயக்கியுள்ளார் லோகேஷ். இதன் காரணமாகவும் லியோ படத்திற்கு அதிக ஹைப் காணப்படுகிறது. இதனிடையே லியோ படத்தின் அட்வான்ஸ் புக்கிங், ரிலீஸுக்கு ஆறு வாரங்களுக்கு முன்பே லண்டனில் தொடங்கியது. புக்கிங் ஆரம்பித்த சில மணி நேரங்களில் ரிசர்வேஷனில் புதிய சாதனை படைத்தது லியோ. இதனால், பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி வசூல் கன்ஃபார்ம் என சொல்லப்படுகிறது.

இன்னொரு பக்கம், தமிழ்நாட்டில் மட்டும் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி FDFS ஷோ இருக்காது என சொல்லப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல் காலை 9 மணி ஸ்பெஷல் ஷோவுக்கும் அனுமதி கிடைப்பது சந்தேகமே எனத் தெரிகிறது. அதேநேரம் சென்சாரிலும் லியோவுக்கு சிக்கல் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஏற்கனவே நான் ரெடி பாடலின் சில வரிகளை நீக்க வேண்டும் என சென்சார் போர்ட் உத்தரவிட்டது. அதேபோல், விஜய் சிகரெட் பிடிக்கும் காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கவில்லை.

 Leo: Vijays Leo film will be released with a Uncut version

இதனால், லியோ நோ கட்ஸ் வெர்ஷன் ஒன்றை தயார் செய்து வருகிறாராம் லோகேஷ் கனகராஜ். அதாவது எந்த எடிட்டிங்கும் இல்லாமல் லியோ படத்தை முழுவதுமாக வெளியிட முடிவு செய்துள்ளாராம். அதாவது UN CUT வெர்ஷன் என்றால், சிக்ரெட் பிடிக்கும் காட்சிகள், வன்முறை அதிகமாக இடம்பெற்ற சீன்ஸ் எதுவாக இருந்தாலும் எடிட் செய்யாமல் இருக்கும். ஆனால், இந்த அன் கட் வெர்ஷனுக்கு இந்தியாவில் அனுமதி கிடைக்காது என்றே சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் மட்டுமே இதுவரை அன் கட் வெர்ஷனுடன் படங்கள் வெளியாக அனுமதிக்கப்படுகிறது என விமர்சகர்கள் கூறி வருகின்றனர். அதேநேரம், லியோ ஓடிடியில் வெளியாகும் போது, கண்டிப்பாக அன் கட் வெர்ஷனுடன் தான் ஸ்ட்ரீமிங் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே லியோ படத்தின் ஸ்பெஷல் ஷோவுக்கான அனுமதி, தமிழக அரசிடம் இருந்து கிடைக்கும் என, ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X