Leo: லியோவை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்ற லோகேஷ்... எல்லாமே விஜய்ண்ணாவுக்காக தான்!

சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிந்துவிட்டது.

இதனைத் தொடர்ந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார் லோகேஷ்.

 Leo: Vijays Leo film will release in IMAX technology

இந்நிலையில் லியோ படத்தை அடுத்த லெவலுக்கு கொண்டு செல்ல லோகேஷ் முடிவுசெய்துவிட்டாராம்.

அடுத்த லெவலுக்கு செல்லும் லியோ: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதமே முடிவுக்கு வந்தது. 125 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்ட லோகேஷ், தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் உட்பட ப்ரொமோஷன் வேலைகளிலும் பிஸியாகிவிட்டார். விஜய் பிறந்தநாளில் ஃபர்ஸ்ட் சிங்கிள், சஞ்சய் தத் பிறந்தநாளில் அவரது க்ளிம்ப்ஸ் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகின.

 Leo: Vijays Leo film will release in IMAX technology

இதன் தொடர்ச்சியாக வரும் 15ம் தேதி ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது க்ளிம்ப்ஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விரைவில் மேலும் பல அப்டேட்கள் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இந்நிலையில், லியோ படம் குறித்து இன்னொரு மாஸ் அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்தப் படத்தை ஐமேக்ஸ் டெக்னாலஜியில் வெளியிட லோகேஷ் பிளான் செய்துள்ளாராம்.

7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ லலித் குமார் தயாரிப்பில், பல கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகிறது லியோ. காஷ்மீர், ஹைதராபாத், சென்னை என இந்தியாவுக்குள்ளே தான் லியோ ஷூட்டிங் நடந்துள்ளது. ஆனாலும், சண்டைக் காட்சிகளுக்காகவும் கிராபிக்ஸ் வேலைகளுக்காகவும் கோடிக்கணக்கில் பட்ஜெட் போடப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல் மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாகவும் லியோ உருவாகியுள்ளது.

 Leo: Vijays Leo film will release in IMAX technology

இதனால், லியோ படத்தை ஐமேக்ஸில் வெளியிட்டால் அதற்கு இன்னும் ரீச் கிடைக்கும் என படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். லியோ படத்தை ஐமாக்ஸில் வெளியிடும் வேலைகளையும் லோகேஷ் கனகராஜ் தொடங்கிவிட்டாராம். இதனிடையே லியோ படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளதாகவும், இரண்டாம் பாகம் 2025 அல்லது 2026ம் ஆண்டு ரிலீஸாகும் எனவும் சொல்லப்படுகிறது.

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் ஐமேக்ஸ் டெக்னாலஜியில் வெளியானது. அதனைத் தொடர்ந்து மேலும் சில பெரிய பட்ஜெட் படங்கள் ஐமேக்ஸில் வெளியாகி வரும் நிலையில், தற்போது அந்த லிஸ்ட்டில் விஜய்யின் லியோவும் இணையவுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு இன்னும் வெளியிடவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X