Leo: ரிலீஸ் தேதிக்கு முன்பே தமிழ்நாட்டில் லியோ ஸ்பெஷல் ஷோ... விஜய்யின் மாஸ்டர் பிளான்!!
சென்னை: விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படம் வரும் 19ம் தேதி வெளியாகவுள்ளதால், நேற்று மாலை லியோ ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டது.

இந்நிலையில், லியோ படத்திற்கு FDFS, ஸ்பெஷல் ஷோ திரையிடல்களுக்கு தமிழ்நாட்டில் அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.
இதனால், ஒருநாள் முன்னதாகவே லியோ படத்தை ரிலீஸ் செய்திட படக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.
ஒருநாள் முன்னதாக வெளியாகும் லியோ
விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் ரிலீஸான இந்த ட்ரெய்லர், லியோ மீதான எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற வைத்துள்ளது. இதனால், மாஸ்டரைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கூட்டணி லியோவிலும் மாஸ் ஹிட் கொடுக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும், விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். லியோ படப்பிடிப்புத் தொடங்கும் போது படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி, வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது லியோ. அதேநேரம் லியோ படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சியான FDFS, 9 மணி ஸ்பெஷல் ஷோ போன்றவற்றிற்கு அனுமதி கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது.

ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகாவில், லியோ FDFS, ஸ்பெஷல் ஷோ திரையிடல்கள் உறுதியாகியுள்ளது. அதேபோல், அமெரிக்கா போன்ற நாடுகளில் இந்திய நேரப்படி, 18ம் தேதி இரவே லியோ வெளியாகிவிடும். இதனால் தமிழ் ரசிகர்கள் மட்டும் லியோ படத்தை தாமதமாக பார்க்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இது விஜய் ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இதனையடுத்து ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க விஜய்யும் லியோ டீமும் முடிவெடுத்துள்ளதாம். அதன்படி, ஒருநாள் முன்னதாக லியோவை ரிலீஸ் செய்துவிடலாம் என அவர்கள் முடிவெடுத்துள்ளார்களாம். ப்ரீமியர் ஷோ என்ற பெயரில் வரும் 18ம் தேதி மாலை, இரவு காட்சிகளில் லியோவை ஸ்கீரினிங் செய்துவிடலாம் என படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
ஆனாலும் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. சென்னையில் உள்ள வெற்றி திரையரங்க உரிமையாளர் தான், லியோ ப்ரீமியர் ஷோ பற்றி தனது டிவிட்டரில் அப்டேட் கொடுத்துள்ளார். இது உண்மையாக இருக்கும் என விஜய் ரசிகர்கள் பெரும் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











