Leo: “லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ்... ஸ்பெஷல் ஷோ காரணமே இதுதான்..” சீக்ரெட் சொன்ன பிரபலம்!!
சென்னை: விஜய்யின் லியோ திரைப்படம் அடுத்த வாரம் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதனையடுத்து தமிழ்நாட்டில் இந்தப் படத்தின் அட்வான்ஸ் புக்கிங் நேற்று முதலே தொடங்கியது.
இரு தினங்களுக்கு முன்னர் லியோ படத்திற்கான சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், லியோ முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல், ஸ்பெஷல் ஷோ அனுமதி கொடுக்க காரணம் ஆகியவை பற்றி வலைப்பேச்சு பிஸ்மி விளக்கம் கொடுத்துள்ளார்.

லியோ ஸ்பெஷல் ஷோ காரணம் இதுதான்
விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. லலித் குமார் தயாரித்துள்ள இந்தப் படம் அடுத்த வாரம் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. பான் இந்தியா படமான லியோவுக்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி உலகம் முழுவதும் அதிக எதிர்பார்ப்பு இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் சாதனை படைக்கும் என சொல்லப்படுகிறது.
லியோ ட்ரெய்லர், மூன்றாவது பாடல் என வரிசையாக அப்டேட் கொடுத்த படக்குழு, லியோ ஐமேக்ஸில் ரிலீஸாகும் எனவும் அறிவித்தது. இதனால், லியோ படத்தை பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். இதனையடுத்து தமிழ்நாட்டில் நேற்று முதல் லியோ அட்வான்ஸ் புக்கிங்கும் தொடங்கியது. கோவை, மதுரை, நெல்லை போன்ற பகுதிகளில் லியோ அட்வான்ஸ் புக்கிங் தொடங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னதாக லியோ படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு தமிழ்நாட்டில் திரையிட அனுமதி கிடைத்துள்ளது. லியோ ஆடியோ லான்ச் கேன்சல் ஆனதன் பின்னணியில் அரசியல் அழுத்தம் இருந்ததாக சொல்லப்பட்டது. ஆனால், அது பொய் என்பதை நிரூபிக்கும் வகையில் லியோ ஸ்பெஷல் ஷோ திரையிட தமிழ்நாடு அரசு அனுமதி கொடுத்து சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
அதேபோல், லியோ பட விவகாரத்தில் அரசியல் இல்லை என அமைச்சர் சாமிநாதனும் நேற்று விளக்கம் கொடுத்திருந்தார். அதனால் தமிழ்நாடு அரசுக்கு என்ன லாபம் கிடைத்துவிடப் போகிறது எனவும் அவர் கேட்டிருந்தார். இந்நிலையில், லியோ ஸ்பெஷல் ஷோ திரையிட அனுமதி கிடைத்தது பற்றி வலைப்பேச்சு பிஸ்மி விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது தமிழ்நாட்டில் இதுவரை முதல் நாளில் அதிகபட்ச வசூல் என்ற சாதனையை விஜய்யின் பீஸ்ட் தான் செய்துள்ளது.

அதாவது விஜய்யின் பீஸ்ட் முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டுமே 33 கோடி ரூபாய் வசூலித்தது. அதற்கு முன்பு விஜய்யின் சர்கார் 32 கோடி ரூபாய் வசூலித்ததே சாதனையாக இருந்தது. இப்போது இந்த சாதனைகளை முறியடிக்க, லியோ திரைப்படம் முதல் நாளில் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்காகவே லியோ ஸ்பெஷல் ஷோ திரையிட தயாரிப்பு நிறுவனம் தரப்பில் இருந்து இந்தளவு முயற்சி எடுக்கப்பட்டதாக பிஸ்மி கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











