Leo: ஜெயிலருக்கு வந்த அதே சோதனை... லியோ 1000 கோடி கலெக்ஷன் சந்தேகம்... தயாரிப்பாளர் சோகம்!
சென்னை: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, அடுத்த மாதம் வெளியாகிறது. லலித் குமார் தயாரித்துள்ள லியோ படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இந்தப் படம் பாக்ஸ் ஆபிஸில் ஆயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தற்போது இந்தி வெர்ஷன் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதால், தயாரிப்பாளர் லலித் குமார் கவலையில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

லியோ ஆயிரம் கோடி கலெக்ஷன் சந்தேகம் தான்: விஜய்யின் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படம் விஜய்க்கு மிகப் பெரிய சூப்பர் ஹிட் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷின் முந்தைய படங்களின் சாதனையை லியோ பிரேக் செய்யும் என, சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.
விஜய்யுடன் த்ரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத், மிஷ்கின், கெளதம் மேனன், மன்சூர் அலிகான் உட்பட பெரிய நட்சத்திரக் கூட்டணியே லியோ படத்தில் இணைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் லோகேஷின் யுனிவர்ஸில் லியோ வேற லெவலில் இருக்கும் என சொல்லப்படுகிறது. இதனால், இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆனால், தற்போது அதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாம். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள லியோ, தமிழில் நேரடியாகவும் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டும் ரிலீஸாகவுள்ளதாம். ஆனால், தற்போது லியோ இந்தியில் வெளியாவதில் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. அதாவது இந்தியில் ரிலீஸானால், ஓடிடியில் 8 வாரங்களுக்குப் பின்னர் வெளியிட வேண்டும் என, பாலிவுட் திரையரங்க உரிமையாளர்கள் ரூல்ஸ் போட்டுள்ளார்களாம்.
ஆனால், லியோ ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் கைப்பற்றியுள்ளதோடு, படம் வெளியாகி ஒரே மாத்தில் ஸ்ட்ரீமிங் செய்யும் என சொல்லப்படுகிறது. இதனால், லியோ இந்தி வெர்ஷன் வெளியாக வாய்ப்பில்லை என சொல்லப்படுகிறது. எனவே நார்த் இந்தியாவில் லியோவின் கலெக்ஷன் பெரிய அடி வாங்கும் என்பதோடு, ஆயிரம் கோடி வசூலை நெருங்கவும் வாய்ப்பே இல்லையாம். லியோ இந்தியில் ரிலீஸாகவில்லை என்றால், 100 முதல் 200 கோடி ரூபாய் வரை பிஸினஸ் பாதிக்கும் எனத் தெரிகிறது.
முன்னதாக ரஜினியின் ஜெயிலர் படத்துக்கும் இதே பிரச்சினை தான் ஏற்பட்டுள்ளது. இந்தியில் வெளியாகவில்லை என்பதால், ஜெயிலர் படத்தின் வசூல் 600 கோடி ரூபாய்க்கும் மேல் அதிகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. லியோ படத்தை பார்த்துவிட்டு விஜய் ஹேப்பியாக இருந்தாலும், தயாரிப்பாளர் லலித் குமார் சோகத்தில் உள்ளாராம்.


Click it and Unblock the Notifications











