Leo: லியோவில் ஹாலிவுட் படங்களை பட்டி டிங்கரிங் செய்த லோகேஷ்... விஜய்க்கு சம்பவம் உறுதி!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று மாலை வெளியானது.

விஜய் - லோகேஷ் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ, பக்கா ஆக்‌ஷன் பேக் மூவி என்பதை ட்ரெய்லர் கன்ஃபார்ம் செய்துள்ளது.

அதேநேரம், லியோ ட்ரெய்லரில் அதிகமான வன்முறை காட்சிகள் இருப்பதாக பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஹாலிவுட் படங்களை காப்பி செய்து லியோ உருவாகியுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 Leo: Vijays Leo is trolled by netizens as a copycat of Hollywood films

விஜய்யை ஏமாற்றிய லோகேஷ்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரமமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. 7 ஸ்க்ரீன்ஸ் ஸ்டூடியோ தயாரித்துள்ள இந்தப் படம், வரும் 19ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. லியோ படத்தை கொண்டாடித் தீர்க்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனார். இதனால், அவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளது லியோ டீம்.

அதன்படி, விஜய்யின் லியோ ட்ரெய்லரை படக்குழு நேற்று மாலை வெளியிட்டது. சன் டிவியின் யூடியூப் தளத்தில் வெளியான லியோ ட்ரெய்லர் வெளியானது முதலே ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. இந்த ட்ரெய்லர் இதுவரை தமிழில் மட்டுமே 25 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 2 நிமிடங்கள் 43 நொடிகள் வரை ஓடும் லியோ ட்ரெய்லர், முழுக்க முழுக்க ஆக்‌ஷனில் தெறிக்கவிட்டுள்ளது.

அதேபோல், இந்தப் படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதும் கன்ஃபார்ம் ஆகியுள்ளது. லியோ விஜய் ரசிகர்களுக்கான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்பதே பலரது எதிர்பார்ப்பு. ஆனால், இந்தப் படத்தின் பல காட்சிகள் ஹாலிவுட் படங்களில் இருந்து காப்பிகேட் செய்யப்பட்டுள்ளதாக நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். லோகேஷ் இதுவரை இயக்கியுள்ள கைதி, விக்ரம் படங்களிலும் ஹாலிவுட் படங்களை காப்பி பேஸ்ட் செய்ததாக ரசிகர்கள் கூறியிருந்தனர்.

இந்நிலையில், லியோ ட்ரெய்லரில் ஹாலிவுட்டில் வெளியான Bullet Train படத்தின் சீன் ஒன்றை அப்படியே அப்பட்டமாக தூக்கி வைத்துள்ளார் லோகேஷ். லியோ ட்ரெய்லரின் இறுதியில் விஜய் கன் லோடிங் சீன் செம்ம பட்டாஸா வெடிக்குது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வந்தனர். ஆனால், இந்த சீன் ஹாலிவுட் படமான Bullet Train-இல் இருந்து சுடப்பட்டுள்ளதை கண்டுபிடித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

அதேபோல், A History of Violence என்ற ஹாலிவுட் படத்தின் கதையை போலவே லியோவும் இருப்பதாக அடுத்த பஞ்சாயத்து தொடங்கியுள்ளது. இதனால், லியோ வெளியாகும் போது விஜய்க்கு தான் சம்பவம் உறுதி எனவும் நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். அட்லீ தமிழ் சினிமாவில் இருந்து காப்பி பேஸ்ட் செய்கிறார் என்றால், லோகேஷ் ஹாலிவுட்டில் இருந்து தட்டி தூக்கி வருகிறார் எனவும் கமெண்ட்ஸ்கள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X