Leo: “லியோ அப்படியே பாட்ஷா கதை தான்... விஜய் டபுள் ஆக்‌ஷன் இல்லை..” இதுதான் ஒன்லைன் ஸ்டோரி!

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ட்ரெய்லர் நேற்று முன்தினம் மாலை வெளியானது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

லியோ ட்ரெய்லரை வைத்து விஜய் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால், அது உண்மையில்லை என்றும் ரஜினியின் பாட்ஷா டைப் கதைதான் லியோ எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

லியோ அப்படியே பாட்ஷா கதை
விஜய்யின் லியோ ட்ரெய்லர் வெளியானதில் இருந்து இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளதால், லியோவுக்கு ரசிகர்களிடம் அதிக ஹைப் ஏற்பட்டுள்ளது. அதனை ட்ரெய்லர் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் லோகேஷ் கனகராஜ். இருப்பினும் இந்த ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தையும், வன்முறை காட்சிகளும் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வரும் விஜய், இப்படி பொறுப்பில்லாமல் நடிக்கலாமா என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனிடையே லியோவில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளதாக சொல்லப்பட்டது. தற்போது வெளியான ட்ரெய்லரிலும் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அப்படியொரு லீட் கொடுத்திருந்தார் லோகேஷ். அதாவது பார்த்திபன், லியோ என இரண்டு கேரக்டர்களில் விஜய் வருவதாக காட்டியிருந்தார்.

 Leo: Vijays Leo story is like to Rajinikanths Baashha film

ஆனால், இது உண்மையில்லை எனவும், லியோவில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்ற உண்மையை வலைப்பேச்சு பிஸ்மி போட்டுடைத்துள்ளார். அதாவது லியோவில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்தால் அது ட்ரெய்லரில் இடம்பெற்றிருக்காது என அவர் விளக்கம் கொடுத்துள்ளார். பாட்ஷா படத்தில் மாணிக் பாட்ஷாவாக மும்பையை மிரள வைத்த ரஜினி, பின்னர் சென்னையில் சாதாரண ஆட்டோ டிரைவர் மாணிக்கமாக வாழ்ந்து வருவார்.

அதேபோல் தான் லியோவிலும் விஜய் தனது உண்மையான அடையாளத்தை மறைத்துவிட்டு, பார்த்திபனாக வாழ்ந்து வருகிறார். வில்லன்களின் டார்ச்சரால் அவர் மீண்டும் லியோவாக மாறுவது தான் இந்தப் படத்தின் கதை என்றும் அவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதேநேரம் மேக்கிங் உட்பட மற்ற விஷயங்களில் லியோ அப்படியே பாட்ஷா மாதிரி இருக்க வாய்ப்பில்லை எனவும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார்.

 Leo: Vijays Leo story is like to Rajinikanths Baashha film

மேலும், பாக்ஸ் ஆபிஸில் ரஜினியின் ஜெயிலர் செய்த சாதனையை, விஜய்யின் லியோ கண்டிப்பாக பிரேக் செய்துவிடும் எனவும், வலைப்பேச்சு பிஸ்மி கூறியுள்ளார். லியோ படத்தை விஜய் ரசிகர்கள் கண்டிப்பாக கொண்டாடித் தீர்ப்பார்கள் என்பது உறுதி, லியோ ஆடியோ லான்ச் கேன்சலானதால் அதற்கும் சேர்த்து படம் வெளியாகும் போது ரிசல்ட் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X