Leo: லீக்கான லியோ டைட்டில் கார்டு... விஜய்யின் தெறிமாஸ் போஸ்டர் இதுதானா..? மாஸ் & கிளாஸ்!!
சென்னை: விஜய் நடித்துள்ள லியோ படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடைபெற்று வருகின்றன.
அதில், லியோவில் டைட்டில் கார்டு செம்ம மாஸ்ஸாக இருக்கும் என ரத்னகுமார் அப்டேட் கொடுத்திருந்தார்.

அதன்படி டைட்டில் கார்டில் 'தளபதி விஜய்' பெயர் வரும் போது ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என கூறியிருந்தார்.
இந்நிலையில், லியோ படத்தில் இருந்து விஜய்யின் டைட்டில் கார்டு லீக்காகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
லீக்கானது லியோ டைட்டில் கார்டு: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் 19ம் தேதி ரிலீஸாகவுள்ளது. இதனையடுத்து இந்தப் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய ரத்னகுமார், லியோ படத்தில் விஜய்யின் டைட்டில் கார்டு பற்றி அப்டேட் கொடுத்திருந்தார்.
லியோவில் வரும் டைட்டில் கார்டு விஜய் ரசிகர்களுக்கு செம்ம சர்ப்ரைஸ்ஸாக இருக்கும் என ஹைப் கொடுத்திருந்தார். மேலும், இந்த டைட்டில் கார்டுக்காகவே லியோ படத்தை பலமுறை பார்க்கலாம் எனவும், இதனால் விஜய் ரசிகர்கள் இதனை மிஸ் செய்துவிட வேண்டாம் என்பதாகக் கூறியிருந்தார். முக்கியமாக லியோ டைட்டில் கார்டு அனிமேஷனில் உருவாகியுள்ளதாகவும் அப்டேட் கொடுத்திருந்தார்.

ரத்னகுமார் கொடுத்த அப்டேட்டால் விஜய் ரசிகர்களிடையே லியோ மீதான எதிர்பார்ப்பு அதிகமானது. இந்த நிலையில், லியோ டைட்டில் கார்டு 'தளபதி விஜய்'-இன் பெயருடன் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. விஜய்யின் செம்ம மாஸ்ஸான போஸ்டருடன் 'தளபதி விஜய்' என ஆங்கிலத்தில் உருவாகியுள்ளது இந்த டைட்டில் கார்டு. மேலும், விஜய்யின் போட்டோவும் 2டி அனிமேஷனில் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.
முதன்முறையாக விஜய்யின் டைட்டில் கார்டு அனிமேஷன் டெக்னாலஜியில் வெளியாகவுள்ளதால், அதற்கான பிஜிஎம் வெறித்தனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக இன்னும் சில மாஸ்ஸான சம்பவங்களை டைட்டில் கார்டில் சேர்க்க லோகேஷ் முடிவு செய்துள்ளாராம். ஆனாலும், லியோ வெளியானதும் வைரலாக வேண்டிய டைட்டில் கார்டு, இப்போதே லீக்காகிவிட்டது.
இருப்பினும் இதுதான் உண்மையான டைட்டில் கார்டா அல்லது இது ஃபேன்மேட் போஸ்டரா என்பது பற்றி எந்த தகவலும் இல்லை. ஒருவேளை இதுதான் ஒரிஜினல் லியோ டைட்டில் கார்டாக இருக்குமானால், அது நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











