Leo: ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கப் போகும் லியோ... அந்த ஒரு சீனுக்கு மட்டும் இத்தனை கோடியா..?

சென்னை: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு, அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை லியோ படத்தில் இருந்து விஜய்யின் போஸ்டர் வெளியாகி வைரலானது.

இன்னொரு பக்கம் லியோ ஹாலிவுட் படங்களுக்கு சாவல் விடும் என தயாரிப்பாளர் லலித் குமார் கூறியுள்ளது, ரசிகர்களின் ஹைப்பை எகிற வைத்துள்ளது.

 Leo: Vijays Leo will challenge Hollywood films... Producer Lalith Kumar hope

ஹாலிவுட்டுக்கு டஃப் கொடுக்கும் லியோ: கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் நடித்துள்ள லியோ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பின்னர் இக்கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது. அதேபோல், முதன்முறையாக லோகேஷின் யுனிவர்ஸில் இணைந்துள்ளார் விஜய். இதனால், லியோ படம் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.

விஜய்யுடன் த்ரிஷா, சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உட்பட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். லியோ டைட்டில் டீசருக்குப் பின்னர், விஜய் பிறந்தநாள் ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது. அதனைத் தொடர்ந்து சஞ்சய் தத், அர்ஜுன் ஆகியோரின் க்ளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டது. தொடர்ந்து அப்டேட் கேட்ட ரசிகர்களுக்கு, நேற்று விஜய்யின் போஸ்டர் வெளியானது.

இந்த போஸ்டரில் விஜய் காஷ்மீரில் இருக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. இதனால், லியோவில் இருந்து அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்துள்ளனர் ரசிகர்கள். இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் லலித் குமார், லியோ படம் குறித்து தரமான அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, காஷ்மீரில் படமாக்கப்பட்ட லியோ காட்சிகள் அனைத்தும், ஹாலிவுட் ரேஞ்சுக்கு வந்துள்ளன.

லோகேஷின் முந்தைய படங்களை விடவும், லியோ சீன் பை சீன் மிரட்டலாக உருவாகியுள்ளது. கண்டிப்பாக லியோ ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் என்பதில் சந்தேகமே இல்லை. காஷ்மீரில் எடுக்கப்பட்ட Hyena Sequence காட்சியின் கிராபிக்ஸ்க்காக மட்டும் 15 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்பட்டுள்ளதாம். இதனால் லியோவில் காஷ்மீர் போர்ஷன் முழுவதும் ரசிகர்களுக்கு செம்ம விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே லியோ படத்தில் விஜய்யின் ஆக்‌ஷன் சீன்ஸ், விஜய் - சஞ்சய் தத் - அர்ஜுன் முதன்முறை சந்திக்கும் காட்சிகள் குறித்து அதிக ஹைப் எழுந்துள்ளது. இந்த வரிசையில் தற்போது காஷ்மீர் போர்ஷன் குறித்து தயாரிப்பாளர் லலித் குமாரே ஆச்சரியத்துடன் அப்டேட் கொடுத்துள்ளது ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X