Leo: “அந்த சிங்கிள் ஷாட் ஃபேக்டரி ஃபைட் சீன்..” லியோவில் விஜய்யின் அதிரிபுதிரி ஆக்‌ஷன் ட்ரீட் ரெடி!

சென்னை: ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்களைத் தொடர்ந்து, விஜய்யின் லியோ அடுத்த மாதம் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அக்டோபர் 19ம் தேதி வெளியாகும் லியோவில் இருந்து, அடுத்த வாரம் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

 Leo: Vijays single-shot fight scene update in Leo

இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சிங்கிள் ஷாட் ஃபைட் சீன் குறித்து தரமான அப்டேட் வெளியாகியுள்ளது.

விஜய்யின் சிங்கிள் ஷாட் மேஜிக்: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோவில் இணைந்துள்ளது. அதுமட்டும் இல்லாமல், கைதி, விக்ரம் படங்களைத் தொடர்ந்து, லியோவும் LCU கான்செப்ட்டில் உருவாகியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாரிசு திரைப்படம் வெளியான உடனேயே லியோ படப்பிடிப்பில் கலந்துகொண்டார் விஜய். காஷ்மீர், சென்னை, விசாகப்பட்டினம் என லியோ படத்தின் மொத்த படப்பிடிப்பும் 125 நாட்களில் முடிவடைந்தது. இதனிடையே விஜய்யின் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான 'நான் ரெடி' பாடல் வெளியானது. அதனைத் தொடர்ந்து விரைவில் இரண்டாவது பாடலை வெளியிட படக்குழு ரெடியாகிவிட்டது.

அதேபோல், லியோ இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில், கமல்ஹாசன், விக்ரம், தனுஷ் ஆகியோர் கலந்துகொள்ளலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், லியோ படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு ஆக்‌ஷன் சீன் பற்றிய ஸ்பெஷல் அப்டேட் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விஜய், அர்ஜுன், சஞ்சய் தத் ஆகியோர் சந்திக்கும் சீனில், தியேட்டரில் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட் இருக்கும் என சொல்லப்பட்டது.

அதற்கு நிகராக ஃபேக்டரியில் நடைபெறும் ஒரு ஃபைட் சீனில், விஜய் சிங்கிள் ஷாட்டில் நடித்து மிரட்டியுள்ளாராம். அன்பறிவ் ப்ரதர்ஸ் கோரியோகிராபி செய்துள்ள இந்த ஃபைட் சீன், முழுக்க முழுக்க விஜய்யின் வெறித்தனமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக பாடல்களில் மட்டுமே சிங்கிள் ஷாட்டில் டான்ஸ் ஆடும் விஜய், இந்தமுறை ஹைரிஸ்க் எடுத்து ஃபைட் சீனில் நடித்துள்ளாராம்.

விஜய்யின் கேரியரில் இந்தமாதிரி ஒரு ஃபைட் சீன் இதுவரை வந்திருக்காது என படக்குழுவினரே அடித்துக் கூறுகின்றனர். ரஜினியின் ஜெயிலர், ஷாருக்கானின் ஜவான் படங்கள் அடுத்தடுத்து வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் இண்டஸ்ட்ரி ஹிட் அடித்துள்ளன. இந்த இரண்டு படங்களையும் தூக்கி சாப்பிடும் அளவிற்கு லியோவில் பல தரமான சம்பவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X