Leo: "இந்த மாதிரி சீன்ஸ் இருந்திருந்தா படம் ஓடிருக்கும்..” வைப் கொடுக்கும் லியோ Unseen வீடியோ

சென்னை: விஜய் தற்போது தளபதி 68 படத்தில் நடித்து வருகிறார். முன்னதாக அவர் நடித்த லியோ திரைப்படம் அக்டோபரில் வெளியாகியிருந்தது. இந்நிலையில் லியோவில் இருந்து ஒரு க்யூட்டான Unseen வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

க்யூட்டாக வெளியான லியோ Unseen வீடியோ
கோலிவுட் மாஸ் ஹீரோ விஜய் தற்போது தளபதி 68 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். வெங்கட் பிரபு இயக்கும் இந்தப் படத்தை ஏஜிஎஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. விஜய்யுடன் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி செளத்ரி, யோகி பாபு என பெரிய நட்சத்திரக் கூட்டமே நடித்து வருகிறது.

Leo: Vijays Unseen video released from Leo movie

இதனால் தளபதி 68 படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. முன்னதாக அதிக எதிர்பார்ப்புடன் வெளியான லியோ படத்துக்கு கலவையான விமர்சனங்களே கிடைத்தன. விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியானது. லோகேஷின் LCU ஜானர் படமான லியோ, பாக்ஸ் ஆபிஸில் 600 கோடி ரூபாய் வரை வசூலித்தது.

முன்னதாக இந்தப் படம் ஆயிரம் கோடி ரூபாய் வரை வசூலிக்கும் என சொல்லப்பட்டது. அந்தளவிற்கு லியோ படத்துக்கு எக்கச்சக்கமான ஹைப் இருந்தது குறிப்பிடத்தக்கது. சுவாரஸ்யம் இல்லாத கதை, வலுவில்லாத திரைக்கதை, மோசமான மேக்கிங், அதிகமான வன்முறை காட்சிகள் ஆகியவை தான் லியோ படத்தின் தோல்விக்கு காரணம் விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது லியோ படத்தில் இருந்து Unseen வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் விஜய் தனது மகளின் பள்ளி விழாவில் விளையாடுகிறார். செம்ம க்யூட்டான ஃபீல்குட் வீடியோவாக இது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். அதுமட்டும் இல்லாமல் லியோ படத்தில் இந்த மாதிரி சீன்ஸ் அதிகம் இருந்திருக்கலாம் எனக் கூறியுள்ளனர்.

அதிகமான வன்முறை காட்சிகளுக்குப் பதிலாக விஜய்யின் க்யூட்டான காட்சிகள் இருந்திருந்தால் லியோ இன்னும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கும் என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். இந்நிலையில் தளபதி 68 படத்தில் ஆக்‌ஷன் சீன்ஸ் அதிகம் இருந்தாலும், கதை, திரைக்கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X