Leo: எது! ஷாஜகான் படத்துல விக்ரம், லியோவா..? அடேய் யாருப்பா நீங்களாம்... அவங்க யாருன்னு தெரிஞ்சா..?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் லியோ படம் மீது அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.
இது லோகேஷ் கனகராஜ்ஜின் LCU படமாக இருக்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
விக்ரம் படத்தின் முன் கதையா அல்லது கைதி சீக்வெல்லா என பெரிய விவாதமே நடந்து வருகிறது.
ஆனால், லியோ யுனிவர்ஸ் விஜய்யின் ஷாஜகான் படத்தில் இருந்தே தொடர்வதாக நெட்டிசன்கள் கண்டுபிடித்து பிரமிக்க வைத்துள்ளனர்.

ஷாஜகான் படத்தில் விக்ரம், லியோ: விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. மாஸ்டருக்குப் பின்னர் விஜய் - லோகேஷ் கூட்டணி மீண்டும் லியோ படத்தில் இணைந்துள்ளனர். இப்படத்திற்கு கோலிவுட்டில் ரொம்பவே எதிர்பார்ப்பு காணப்படுகிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என லோகேஷ் இயக்கிய 4 படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன.
அதுமட்டும் இல்லாமல் கைதி, விக்ரம் என இந்த இரண்டு படங்களுமே லோகேஷின் LCU கான்செப்ட்டில் இணைந்தன. விக்ரம் வெற்றிக்குப் பின்னர் இனி தனது படங்களில் LCU இருக்கும் என லோகேஷும் கெத்தாக அறிவித்திருந்தார். இதனால், தற்போது விஜய் நடித்துள்ள லியோ லோகேஷின் யுனிவர்ஸில் கனெக்ட் ஆகுமா இல்லையா என ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துள்ளனர்.
இன்னொருபக்கம் விஜய்யின் லியோ, விக்ரம் படத்தின் முந்தைய பாகமாகவும், கைதியின் தொடர்ச்சியாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், நெட்டிசன்களோ இன்னும் பல அடிகள் பாய்ந்து லியோவின் லீட் குறித்து அபூர்வமான தகவல்களை கண்டுபிடித்துள்ளனர். அதாவது விஜய் நடிப்பில் 2001ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஷாஜகான்.
காதலர்களை சேர்த்து வைக்கும் ஹீரோவாக ஷாஜகான் படத்தில் நடித்திருந்தார் விஜய். இப்படத்தின் ஒரு காட்சியை டிவிட்டரில் ஷேர் செய்துள்ள நெட்டிசன்கள், அதில் மாஸ்டர் படத்தின் ஜேடி, விக்ரம், லியோ போன்ற கேரக்டர்களின் லீட் இருப்பதை சுட்டிக் காட்டி புல்லரிக்க வைத்துள்ளனர். அதாவது ஷாஜகான் படத்தில் ஒரு புக் ஸ்டால் செல்லும் விஜய், நாயகியை பார்த்து உருகிக் கொண்டிருக்கிறார்.
அப்போது அவரது பின்னால் உள்ள போர்டில் சில பெயர்கள் தெரிகின்றன. அதில் தான் ஜேடி, விக்ரம், லியோ ஆகிய பெயர்கள் இருக்கின்றன. அதேபோல், பாப்லோ என்ற பெயரும் உள்ளது. இதையெல்லாம் லோகேஷின் யுனிவர்ஸில் கனெக்ட் செய்து லோகேஷுக்கே டஃப் கொடுத்துள்ளனர் விஜய் ரசிகர்கள். ஆனால், அந்த போர்டில் இருப்பதெல்லாம் பிரபல எழுத்தாளர்களின் பெயர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கியமாக பால்லோவின் பெயரை பிரபல கஞ்சா கடத்தல் மன்னன் என நினைத்து, லோகேஷின் படங்களிலும் அதேபோல கேரக்டர்கள் தானே ஹீரோ என கனெக்ட் செய்துள்ளது சிலிர்க்க வைத்துள்ளது. இந்த டிவிட்டர் வீடியோவை பார்த்த பலரும், "யாருப்பா நீங்களாம்... இவ்ளோ உன்னிப்பா கவனிச்சா எப்புட்றா யப்பா" என கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











