Leo: கைதி பாதி விக்ரம் மீதி... லியோவில் லோகேஷ் வைத்த ட்விஸ்ட்... இவர்தான் மெயின் கேரக்டரா..?
சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ ஷூட்டிங் மொத்தமாக நிறைவுப் பெற்றது.
இதனையடுத்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார் லோகேஷ்.
இந்தப் படம் லோகேஷின் LCU கான்செப்ட்டில் இருக்கும் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில், லியோவில் கைதி, விக்ரம் படங்களில் நடித்த காளிதாஸ் ஜெயராம் நடித்துள்ளது குறித்து ஒரு மாஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.

லியோவில் இணைந்த காளிதாஸ் ஜெயராம்: விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் லியோ, அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. செம்ம மாஸ்ஸான மல்டி ஸ்டார்ஸ் படமாக உருவாகும் லியோ, கோலிவுட்டில் இண்டஸ்ட்ரி ஹிட் அடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக லியோ லோகேஷின் LCU கான்செப்ட்டில் இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
125 நாட்களில் மொத்த படப்பிடிப்பையும் முடித்துவிட்ட லோகேஷ், போஸ்ட் புரொடக்ஷனில் லியோவை பட்டைத் தீட்டி வருகிறார். தனது முந்தைய படங்களைப் போல லியோவிலும் ஏராளமான நடிகர்களை களமிறக்கியுள்ளார் லோகேஷ். அதன்படி விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், மிஷ்கின், அர்ஜுன், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மன்சூர் அலிகான் உள்ளிட்ட இன்னும் பெரும் நட்சத்திரப் பட்டாளமே லியோவில் நடித்துள்ளது.
இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி ஹீரோக்களும் லியோவில் நடித்துள்ளதாகக் கூறப்படுகிறது. சர்ப்ரைஸ்ஸாக கமல், ஃபஹத் பாசில் ஆகியோர் கூட நடித்திருக்கலாம் அல்லது அவர்களது வாய்ஸ் ஓவர் இடம்பெறும் என்றெல்லாம் சொல்லப்படுகிறது. அதேபோல் சூர்யாவின் ரோலக்ஸ், கார்த்தியின் டெல்லி கேரக்டர்கள் லியோவில் இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விக்ரம் படத்தில் கமலின் மகனாக நடித்த காளிதாஸ் ஜெயராம் லியோவிலும் லீட் ரோல் செய்திருப்பதாகக் கூறப்படுகிறது. கைதி படத்தில் இருந்தே இவரது கேரக்டர் லோகேஷின் யுனிவர்ஸில் இருப்பதாக காட்டப்பட்டிருந்தது. அதேநேரம் விக்ரம் படத்தில் காளிதாஸ் ஜெயராம் உயிரிழப்பதாகவும், அதன்பின்னரே கமலின் ரிவென்ஜ் ஆரம்பமாவதாகவும் திரைக்கதையை நகர்த்தியிருப்பார் லோகேஷ்.
இந்நிலையில், விஜய்யின் லியோ விக்ரம் படத்தின் முந்தைய பாகமாகவும், கைதியின் தொடர்ச்சியாகவும் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால், லியோவில் காளிதாஸ் ஜெயராம் கேரக்டர் மிக முக்கியமானதாக இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏசிபி பிரபஞ்சன் என்ற காளிதாஸின் கேரக்டரில் இருந்தே லியோவின் கதை தொடங்கும் எனவும், சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Click it and Unblock the Notifications











