என்னோட கோபமே லோகேஷ் மேலதான்.. என்னை வேஸ்ட் பண்ணிட்டாரு.. லியோ வில்லன் பகீர் குற்றச்சாட்டு!
சென்னை: பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் தென்னிந்திய மொழிப் படங்களில் சமீப காலமாக மிரட்டல் வில்லனாக நடித்து வருகிறார். கேஜிஎஃப் 2 படத்தில் அதீராவாக நடித்து அதிர வைத்திருப்பார். ஆனால், லியோ படத்தில் அவருடைய வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை. இந்நிலையில், இன்று நடைபெற்ற கேடி படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் லோகேஷ் என்னை வீணாக்கி விட்டார் என சஞ்சய் தத் பகீர் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பீஸ்ட் படத்தில் விஜய்யுடன் நடித்த மலையாள நடிகர் ஷைன் டாம் சாக்கோ நெல்சன் இயக்கத்தில் நடித்தது குறித்து பேசும் போது, பீஸ்ட் படத்தில் ஏன் நடித்தேன் என இருந்தது என பேசிய்து பெரும் பரபரப்பை கிளப்பியது.

இந்நிலையில், விஜய்யுடன் இணைந்து நடித்த இன்னொரு வேற்றுமொழி நடிகரும் தன்னை படத்தில் வீணடித்து விட்டார்கள் என பேசியிருப்பது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கூலி படத்தில் எந்த நடிகர் இதுபோல எதிர்காலத்தில் பேசப் போகிறார்கள் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.
விஜய் அப்பாவுக்கே பிடிக்கல: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என வரிசையாக ஹிட் கொடுத்து வந்த லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து கடைசியாக இயக்கிய லியோ படத்தில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தார். அந்த படத்தின் முதல் பாதி சூப்பர் என்றும் 2ம் பாதி சுமார் என லோகேஷிடமே சொன்னேன். ஆனால், அவர் அதை மதிக்கவே இல்லை என சந்திரசேகர் சினிமா மேடையிலேயே பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
லோகேஷ் மேலதான் கோபம்; ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்னோட சீனியர்கள் அவர்களுடைய படங்களை எப்போதுமே விரும்பிப் பார்ப்பேன். கூலி படத்தை பார்க்க ரொம்பவே ஆவலுடன் காத்திருக்கிறேன். தக் லைஃப் படத்தையும் பார்க்க வேண்டும் என நினைத்துக் கொண்டிருக்கிறேன். விஜய்யுடன் லியோ படத்தில் நடித்தது நல்ல அனுபவம். ஆனால், எனக்கு லோகேஷ் கனகராஜ் மீது தான் கோபம். அவர் என்னை வேஸ்ட் பண்ணிட்டார் என சஞ்சய் தத் இன்று நடைபெற்ற கேடி படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் வெளிப்படையாக பேசியுள்ளார்.

எல்சியூனா என்னானே தெரியாது: மேலும், எல்சியூவில் நீங்க நடித்துள்ள நிலையில், அடுத்த எல்சியூ படம் குறித்து ஏதாவது அப்டேட் கொடுங்க என்று சில பத்திரிகையாளர்கள் சஞ்சய் தத்திடம் கேள்விகளை எழுப்ப, திருதிருவென முழிக்க ஆரம்பித்துவிட்டார். கடைசி வரை எல்சியூ என்றால் என்னவென்றோ, லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என விரிவாக்கம் கொடுத்த பின்னரும் அவருக்கு புரியவே இல்லை. கடைசியாக அருகில் இருந்தவர்கள் விளக்கம் கொடுத்த நிலையில், அதுபற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாது என கூறிவிட்டார். லியோ படத்தில் நடிக்கும் போது என்னுடைய சகோதரர், மகன் என்றெல்லாம் லோகேஷ் கனகராஜை சஞ்சய் தத் பாராட்டி பேசியது குறிப்பிடத்தக்கது.
கூலி படம் கைகொடுக்குமா?: லியோ படத்தின் இரண்டாம் பாகத்தில் ஏற்பட்ட சொதப்பல்கள் போல கூலி படத்தில் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக கடந்த 2 வருடங்களாக எந்தவொரு நல்லதுக்கும் கெட்டதுக்கும் கூட போகாமல் கடுமையாக லோகேஷ் கனகராஜ் செதுக்கி வருகிறார். கண்டிப்பாக கூலி படத்தில் அப்படி ஏதும் சொதப்பல் இல்லாமல் கொடுப்பார் என்றே ரசிகர்கள் மலை போல நம்பிக் கொண்டிருக்கின்றனர். படம் தரமாக வந்துவிட்டால் தமிழ் சினிமாவின் முதல் 1000 கோடி பாக்ஸ் ஆபீஸ் படமாக அமைந்துவிடும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications











