லியோ விநாயகர் ரெடி.. விநாயகர் சதுர்த்தி முதல் அப்டேட்டும் அனல் பறக்கப் போகுது.. வேறலெவல் வெறித்தனம்!

சென்னை: லியோ படம் வரும் அக்டோபர் 19ம் தேதி வெளியாக உள்ள நிலையில், மீண்டும் அப்டேட்கள் அலப்பறையை ஆரம்பிக்கிறோம் என தற்போது 7ஸ்க்ரீன் ஸ்டூடியோ அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளனர். லியோ படத்தின் தெலுங்கு போஸ்டருடன் அந்த அலப்பறை ஆரம்பமாகிறது.

இது ஒரு பக்கம் இருக்க, விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு விஜய் ரசிகர்கள் லியோ விநாயகரையே உருவாக்கி மாஸ் காட்டி உள்ளனர். அதன் வீடியோ தற்போது டிரெண்டாகி வருகிறது.

Leo Vinayagar statue grabs fans attention on this Vinayagar Chathurthi

விநாயகர் சதுர்த்தி: செப்டம்பர் 18ம் தேதி விநாயகர் சதுர்த்தி உலகம் முழுவதும் கொண்டாடப்பட உள்ள நிலையில், விநாயகர் சிலைகள் எல்லாம் புதிது புதிதாக உருவாகி உள்ளன. ஆண்டுதோறும் சினிமா தீமில் சில விநாயகர் சிலைகள் உருவாக்கப்பட்டு மக்களின் கவனத்தை ஈர்க்கும். கடந்த ஆண்டு விக்ரம் கணபதி உருவாக்கப்பட்ட நிலையில், இந்த முறை லியோ கணபதி ரசிகர்கள் உருவாக்கி உள்ளனர்.

லியோ விநாயகர்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடித்த லியோ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், லியோ விஜய் போலவே ஹேர்ஸ்டைல் எல்லாம் வைத்து கையில் காப்புடன் சிங்கத்தை எதிர்த்து நிற்பது போல லியோ விநாயகரை விஜய் ரசிகர்கள் சிலர் உருவாக்கி இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவுக்காக வைத்துள்ளனர்.

10 அடி சிலை: 12 அடியில் பிரம்மாண்டமாக இந்த சிலையை உருவாக்க நினைத்த நிலையில், அரசு ஆணைக்கிணங்க 10 அடி சிலையாகவே விநாயகர் சிலையை உருவாக்கி இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர். லியோ படத்தின் வெற்றிக்காக வேண்டிக் கொண்டு லியோ விநாயகரை உருவாக்கி இருக்கிறோம் என்றும் முன்னதாக விஜய்யின் பிகில் படம் வரும் போது பிகில் பிள்ளையாரை உருவாக்கி இருந்தோம் என்றும் அந்த ரசிகர்கள் பேட்டியளித்துள்ள வீடியோ டிரெண்டாகி வருகிறது.

ஒரு மாசம் திருவிழா: விநாயகர் சதுர்த்தியுடன் பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கவுள்ள லியோ படத்தின் அதிரடி ப்ரோமோஷன் இன்னும் ஒரு மாசத்துக்கு அதிரடி காட்டும் என செவன் ஸ்க்ரீன் தயாரிப்பு நிறுவனமே தற்போது அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X