வாவ்.. ஆஸ்கர் நாயகனுக்கு பாலிவுட் படத்தில் நடிக்க ஆசையாம்.. லியானார்டோ டிகாப்ரியோ அதிரடி அறிவிப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் லியானார்டோ டிகாப்ரியோ பாலிவுட் படத்தில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார்.

டைட்டானிக், இன்ஸெப்ஷன், ஏவியேட்டர், சமீபத்தில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் என பல ஹாலிவுட் படங்களில் கலக்கி வரும் டிகாப்ரியோ பாலிவுட் தயாரிப்பாளருடன் நடத்திய உரையாடலின் போது தனது ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

ஏற்கனவே டிகாப்ரியோவின் ஹாலிவுட் படமான கிரேட் காட்ஸ்பி படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் நடித்துள்ளார்.

ராசி இல்லை

ராசி இல்லை

டைட்டானிக் படத்திற்கு பத்து ஆஸ்கர் விருதுகள் கிடைத்தும் லியானார்டோ டிகாப்ரியோவிற்கு ஒரு ஆஸ்கர் விருதும் கிடைக்கவில்லை. அந்த படத்தில் இருந்து பல முறை ஆஸ்கர் விருது விழாவுக்கு அதிக முறை நாமினேட் ஆன போதும், விருது பெறாமல் வெறும் கையுடன் டிகாப்ரியோ திரும்புவார்.

ஆஸ்கர் நாயகன்

ஆஸ்கர் நாயகன்

இதனால், ஆஸ்கருக்கும் டிகாப்ரியோவுக்கும் ராசி இல்லை என்ற முத்திரை குத்தப்பட்டது. ஆனால், தனது விடா முயற்சியால் தொடர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வந்த டிகாப்ரியோ, 2016ம் ஆண்டு வெளியான தி ரெவனன்ட் படத்திற்காக சிறந்த நடிகர் என்ற ஆஸ்கர் விருதினை வென்றார். அந்த படத்தில் தான் கரடியுடன் கட்டி உருண்டு சண்டையிட்ட காட்சிகள் இடம்பெற்றிருக்கும்.

இந்த முறை எப்படி?

இந்த முறை எப்படி?

அடுத்த மாதம் ஆஸ்கர் விருதுகள் வழங்கவுள்ள நிலையில், இந்த முறை டிகாப்ரியோ நடிப்பில் குவன்டின் டரன்டினோ இயக்கத்தில் வெளியான ஒன்ஸ் அப்பான் எ டைம் இன் ஹாலிவுட் படம் 10 பிரிவுகளில் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இந்த படத்தில் துணை நடிகராக நடித்த பிராட் பிட்டுக்கு நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும் என்றும் டிகாப்ரியோவுக்கு கிடைக்காது என்றும் கணிப்புகள் எழுந்துள்ளன.

யார் காரணம்?

யார் காரணம்?

டிகாப்ரியோவுக்கு மட்டுமல்ல இந்த முறை வேறு எந்த நடிகருக்கும் சிறந்த நடிகர் விருது கிடைக்காது. கோல்டன் குளோபை போலவே சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினையும் ஜோக்கர் படத்தில் நடித்த ஜோக்வின் ஃபீனிக்ஸ் தான் தட்டிச் செல்வார் என்பது உலக ரசிகர்களின் ஒட்டுமொத்த கருத்தாக அமைந்துள்ளது.

பாலிவுட் ஆசை

பாலிவுட் ஆசை

இந்நிலையில், பிரபல தொழிலதிபர் ரஷ்மிகாந்த் காம்டருடன் நடத்திய உரையாடலின் போது லியனார்டோ டிகாப்ரியோ, தனக்கு பாலிவுட் படத்தில் நடிக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். மேலும், ஜெயந்தி லால் கத்தாவின் Pen studio தயாரிப்பில் விரைவில் ஒரு பாலிவுட் படத்தில் நிச்சயம் டிகாப்ரியோ நடிப்பார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இது மட்டும் உறுதியானால், பக்காவான இந்திய படத்தில் டிகாப்ரியோவை பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X