இந்த காதலியையாவது கல்யாணம் பண்ணிக்கணுமே... ஹீரோ அம்மா ஆசை
லாஸ் ஏஞ்சல்ஸ்: தான் தற்போது காதலித்து வரும் மாடலை விரைவில் திருமணம் செய்துள்ள வேண்டும் என்று டிகாப்ரியோவின் அம்மா விரும்புவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
டைட்டானிக் படம் மூலம் பிரபலமானவர் ஹாலிவுட் ஹீரோ லியனார்டோ டிகாப்ரியோ. தொடர்ந்து ஏவியேட்டர், த டிபார்ட்டட், இன்செப்சன் உட்பட பல்வேறு படங்களில் நடித்தார்.
பிரேசில் மாடல் கிஸெல், இஸ்ரேல் மாடல் பார் ஹசஷரான், ஜெர்மன் மாடல் ஜோடி கார் உள்ளிட்டோரிடன் கிசுகிசுக்கப்பட்டவர், இந்த 45 வயது டிகாப்ரியோ. சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து உலகம் முழுவதும் தொடர்ந்து குரல்கொடுக்கும் அவர், ஆஸ்கர் விருது மேடையிலேயே பருவநிலை மாற்றம் குறித்து பேசி அசத்தினார்.

கேமிலா மோரோன்
இவர், 22 வயது மாடல் கேமிலா மோரோன் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் அடிக்கடி யாருக்கும் தெரியாமல், முகத்தை மறைத்தபடி ரகசியமாக வெளியே சென்று வருகின்றனர். ஆனாலும் அவர்களை ரசிகர்கள் எளிதாகக் கண்டு படம்பிடித்து விடுகின்றனர்.

அஸ்பென்
இந்நிலையில், இவர்கள் அமெரிக்காவின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள கொலராடோ மாகாணத்தில் உள்ள சுற்றுலாத்தனமான அஸ்பென் பனிமலைப் பகுதிக்கு சென்றனர்.
யாருக்கும் தெரியாமல் இருக்க, முகத்தை மறைத்தபடி ஆடை அணிந்து, அவர்கள் அங்கு ஜாலியாக அவர்கள் பொழுதைக் கழித்தனர்.

புகைப்படங்கள்
ரகசியமாக சுற்றிய அவர்களைக் கண்டுகொண்ட ரசிகர்கள் சிலர், வீடியோவாக எடுத்து இணயத்தில் வெளியிட, இந்தப் புகைப்படங்கள் வைரலாகின. இந்நிலையில் டிகாப்ரியோ, தனது காதலி கேமிலா மோரோனை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று அவர் அம்மா விரும்புகிறார்.

அம்மா இர்மெலின்
'இந்த காதலை அடுத்தக் கட்டத்துக்குக் கொண்டு செல்ல டிகாப்ரியோவுக்கு திட்டம் ஏதுமில்லை. ஆனால், அவர் அம்மா இர்மெலின் அவர்கள் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறார். இல்லை என்றால் கேமிலா பிரிந்து செல்ல வாய்ப்பிருப்பதாகவும் நினைக்கிறார் என்று ஹாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.


Click it and Unblock the Notifications











