சினிமாவில் தலைதூக்கும் லெஸ்பியன் கலாச்சாரம்… சீரழிகிறதா சினிமா ?

சென்னை : முன்பெல்லாம் சினிமாவில் குடும்பம், காதல், சென்டிமென்ட் போன்ற திரைப்படங்கள் தான் அதிக அளவில் வெளிவந்து கொண்டிருந்தன. அது போன்ற கதையம்சம் கொண்ட படங்கள் அனைத்தும் பல நாட்கள் கடந்தும் மக்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களாக இருந்தன.

ஆனால் தற்போதைய சினிமாவின் தலையெழுத்தே முற்றிலுமாக மாறிவிட்டது. எந்த திரைப்படத்தை பார்த்தாலும் ஆபாசம், வன்முறை, கெட்ட வார்த்தைகள், பாலியல் துன்புறுத்தல், லெஸ்பியன் போன்ற காட்சிகள் அதிகம் இடம் பெறுகின்றன.

அதுவும் ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு ஒழுங்குமுறை கிடையாது என்பதால், ஓ.டி.டி தளங்களில் வெளியாகும் பெரும்பாலான படங்களில் லெஸ்பியன் கலாச்சாரம் தலைதூக்கி உள்ளது.

முத்தக்காட்சி

முத்தக்காட்சி

முன்பு சினிமாவில், இலை மறைவு..காய்மறைவாக காட்டப்பட்ட காட்சிகள் தற்போது அப்பட்டமாக காட்டப்படுகின்றன. ஹீரோ, ஹீரோயின் முத்தம் கொடுத்துக் கொள்கிறார்கள் என்றால், அவர்கள் இருவரும் நெருங்கி வந்ததும், இடையில் ஒரு பூங்கொத்து வந்து செல்லும். இது தான் அவர்கள் முத்தம் கொடுத்துக்கொண்டார்கள் என்பதற்கு அடையாளமாகும்.

சர்ச்சைக்குரிய காட்சிகள்

சர்ச்சைக்குரிய காட்சிகள்

ஆனால், தற்போதோ லிப் லாக் முத்தத்தையே ஜூம் போட்டு காண்பிடித்து விடுகிறார்கள். இதுதான், இப்படி என்றால், ரெட்டை அர்த்த வசனம், கெட்ட வார்த்தை, போதாத குறைக்கு லெஸ்பியன் உறவு முறை என சகலத்தையும் சினிமாவில் இறங்கி விட்டு, சினிமா ரசிகர்களையே முகம் சுளிக்கின்றனர்.

பெண்கள் காதலிக்கும் கதை

பெண்கள் காதலிக்கும் கதை

சமீபத்தில் சர்ச்சை இயக்குநர் ராம்கோபால் வர்மா, காட்ரா என்ற ஹிந்தி படத்தைத் தயாரித்து, இயக்கியிருக்கிறார். இந்தப் படம் தமிழில் 'காதல் காதல்தான்' என்ற பெயரில் வெளியானது. ஆண்களை வெறுக்கும் பெண்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். இது இந்தியாவின் முதல் லெஸ்பியன் திரைப்படமாகும்.

ஆல்பம் சாங்

அதுமட்டும் இல்லாமல், ஓடிடி தளங்களில் வெளியாகும் பல படங்கள், வெப் தொடர்கள் போன்றவற்றில் லெஸ்பியன் கலாச்சாரமே மேலோங்கி இருக்கின்றன. சமீபத்தில் தெலுங்கில் "Nuvvunte" என்ற லெஸ்பியன் ஆல்பம் பாடல் வெளியானது. அதுவும் ஒரு லெஸ்பியன் சமாச்சாரம் தான்.

சினிமா பிரியர்கள் கேள்வி

சினிமா பிரியர்கள் கேள்வி

ஏதையோ வித்தியாசமாக சிந்திப்பதாக நினைத்துக் கொண்டு ஒடிடி தளங்களில் வெப் சீரிஸ், ஆல்பம் பாடல்கள், படங்களில் இந்த லெஸ்பியன் காட்சிகள் குறைந்த பட்சம் இரண்டு, மூன்றாவது வந்துவிடுகின்றன. கதைக்கு சம்மாந்தா சம்மதம் இல்லாமல் வரும். இப்படிப்பட்ட காட்சிகள் திணிக்கப்பட முக்கிய காரணம் வியாபார யுக்தியாகவே பார்க்கப்படுகிறது. ஓடிடி தளங்களில் சென்சார் இல்லாமல் வெளியிடப்படும் அடல்ட் கண்டென்ட்டுகளை பார்க்கும் சிறுவர்கள் பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. சினிமாவில் சொல்லுவதற்கும், சிந்திப்பதற்கும் ஓராயிம் கதை இருக்கும் போது இதுபோன்ற ஆபாச கன்டென்ட் தேவையா என்பது சினிமா பிரியர்களின் ஆதங்கமாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X