சூப்பர் ஸ்டாரை உருவாக்கிய பெருமைக்குரியவர் காதர் கான்

By Siva

மும்பை: மறைந்த நடிகர் காதர் கான் பற்றிய சில சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பிரபல பாலிவுட் நடிகர் காதர் கான் உடல் நலக்குறைவால் கனடாவில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இன்று காலை உயிர் இழந்தார். அவரின் உடல் டொரண்டோவில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

யார் இந்த காதர் கான் என்று பார்ப்போம்.

ஆசிரியர்

ஆசிரியர்

காதர் கான் ஆப்கானிஸ்தானில் உள்ள காபூலில் 1937ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதி பிறந்தவர். அவரின் அம்மா பாகிஸ்தானை சேர்ந்தவர். அவர் என்ஜினியரிங்கில் மாஸ்டர்ஸ் டிப்ளமோ முடித்துவிட்டு பைகுல்லாவில் உள்ள எம்.ஹெச். சாபூ சித்திக் பொறியியல் கல்லூரியில் ஆசிரியராக வேலை செய்தார்.

நடிப்பு

நடிப்பு

கல்லூரி விழாவில் அவர் நடிப்பை பார்த்த அகா சாப் என்ற நகைச்சுவை நடிகர் அவரை பற்றி நடிகர் திலீப் குமாரிடம் தெரிவித்தார். அதன் பிறகு திலீப் குமார் காதர் கானை அழைத்து சினிமாவில் சேருமாறு கூறினார். காதர் கான் நடிப்புடன் சேர்த்து திரைக்கதை, வசனம் எழுதும் பணியையும் செய்தார்.

திரைக்கதை

திரைக்கதை

மேடை நாடகங்களில் வேலை செய்து வந்த காதர் கான் ஜவானி திவானி படம் மூலம் சினிமாவுக்கு வந்தார். அந்த படத்திற்கு அவர் திரைக்கதை எழுத ரூ. 1,500 சம்பளம் கொடுக்கப்பட்டது. 1973ம் ஆண்டு வெளியான ராஜேஷ் கன்னாவின் தாக் படம் மூலம் காதர் கான் நடிகரானார். அவர் சுமார் 300 படங்களில் நடித்துள்ளார்.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

1982ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை காதர் கானின் கெரியர் உச்சத்தில் இருந்தது. அவர் பர்வரிஷ், தான் தவ்லத், லூட்மார், குர்பானி உள்ளிட்ட பல படங்களில் வில்லனாக நடித்தார். அவர் சுமார் 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். காதர் கான் மற்றும் அமிதாப் பச்சன் சேர்ந்து 33 படங்களில் பணியாற்றியுள்ளனர். அமிதாபுக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்த வசனங்களை எழுதியவர் காதர் கான்.

ஜரீன் கான்

ஜரீன் கான்

காதர் கான் ஷக்தி கபூருடன் சேர்ந்து 125 படங்களில் பணியாற்றியுள்ளார். அவர் கடைசியாக நடித்த படம் அமன் கே ஃபரிஷ்தே(16). அன்த படத்தில் மறைந்த நடிகர் தேவ் ஆனந்தும் நடித்திருந்தார். நடிகை ஜரீன் கான் காதர் கானின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X