108 MLAகளும் ராஜினாமா செய்யுங்கள்.. மிச்சத்தை மக்கள் பார்த்துக்குவாங்க..விஜய்க்கு ஐடியா கொடுத்த பிரபலம்
சென்னை: விஜய் தான் அடுத்த முதலமைச்சராக பதவியேற்கப் போகிறார் என்று தேர்தல் முடிவுகள் வந்த தினத்தில் இருந்து பேச்சுக்களும் அரசியல் நடவடிக்கைகளும் இருந்து வந்தது. விஜய்யும் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்க ஆளுநரைச் சந்தித்து உரிமை கோரினார். ஆனால் அவரித்தில் 118 என்ற பெரும்பான்மை இல்லாத காரணத்தால், ஆளுநர் விஜய்க்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்காமல் இருக்கிறார். அப்படி இருக்கையில் நடிகர் விஜய்க்கு ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் வலைபேச்சு அந்தணன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்றது. பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்கள் இல்லாத நிலையில் திமுகவைத் தவிர்த்து, திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு வருகிறார்கள். இப்படி இருக்கையில் திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கப்போவதாக பேச்சுக்கள் அடிபட்டு வரும் நிலையில், விஜய் தரப்பில் இருந்து என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

மேலும் திமுக, அதிமுக கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் இல்லாத நிலையில் இது தொடர்பான பேச்சுக்களுக்கே விஜய் ஆதரவாளர்கள் ரியாக்ட் செய்யத் தொடங்கிவிட்டனர். அதிலும் இவர்கள் இருவரும் இணைந்து விஜய்யை ஆட்சி செய்ய விடாமல் தடுத்தால் அடுத்த 25 ஆண்டுகளுக்கு விஜய் தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்றும் பலரும் பதிவிட்டு வருகிறார்கள். இப்படியானவர்களின் பதிவு விஜய்க்கு ஆதரவாக இருக்கும் போது, தவெகவினர் உற்சாகமாகவும் உள்ளனர்.
ராஜினாமா செய்யுங்க: இப்படி இருக்கையில், தொடக்கத்தில் இருந்தே விஜய்க்கும் அவரது கட்சிக்கும் ஆதரவாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வந்த வலைபேச்சு அந்தணன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " முதல்வர் சீட்டில் அமர்ந்தால் கூட, நிம்மதியாக பணி செய்ய விட மாட்டார்கள். கூட்டணி முயற்சியை விட்டொழித்துவிட்டு முதலில் 108 எம்.எல்.ஏ க்களும் ராஜினாமா செய்யுங்கள் விஜய். மிச்சத்தை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது இந்த கருத்து விஜய் ரசிகர்களுக்கு மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

ரியாக்ஷன்: அவரது பதிவுக்கு இணைய வாசி ஒருவர், திமுக அதிமுக ஒன்றாக சேர்ந்து ஆட்சி அமைப்பார்கள் அமைக்க மாட்டார்கள் இரண்டாவது, ஆனால் அவர்களது இரு கட்சியினர் நிர்வாகிகளின் மனநிலையை மக்கள் இப்பொழுதே நன்றாக புரிந்து கொண்டார்கள். அவர்கள் அனைவரும் திமுக அதிமுக ஒன்று சேர வேண்டும் என்று விரும்புகிறார்கள் இது எங்க போய் முடியுமோ தெரியல" என்று பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications