ஆர்மி வேண்டாமே நாம் ஃபேமிலியாக இருப்போம்: ரசிகர்களுக்கு ஆரவ் கோரிக்கை
சென்னை: ஆர்மி எல்லாம் வேண்டாம் நாம் குடும்பமாக இருக்கலாம் என்று ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார் ஆரவ்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓவியாவுக்கு ஆதரவாக அவரது ரசிகர்கள் ஓவியா ஆர்மியை ட்விட்டரில் துவங்கினர். அந்த ஓவியா ஆர்மி இன்றுவரை ட்விட்டரில் ஆக்டிவாக உள்ளது.
இந்நிலையில் ஆரவுக்கு ஆதரவாக ஆரவ் ஆர்மியும் துவங்கப்பட்டது.
ஓவியா ஆர்மி
ஓவியா ஆர்மிக்காரர்கள் ஆரவ் ஆர்மியை ட்விட்டரில் மரண கலாய் கலாய்த்து வருகிறார்கள். ஆரவுக்கு ஆர்மி என்று ஒன்று உள்ளதா என்று கேட்கிறார்கள்.
குடும்பம்
என் அன்பான ரசிகர்களுக்கு ஒரு வேண்டுகோள். உங்களின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. நாம் குடும்பமாக இருப்போம் ஆர்மியாக அல்ல என்று ட்வீட்டியுள்ளார் ஆரவ்.
ஆரவ்
நான் சொல்லல...இன்னும் கொஞ்சம் நாள்ள ஆரவ் ஃபேமிலி சொல்லுவான்னு என்று ஓவியா ஆர்மிக்காரர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
44 பேர்
தம்பி மொத்தமே 44 பேர் தான் இருக்காங்க
இல்லையே
ஆரவ் அப்படிலாம் ஒன்னும் இருக்குற மாதிரி தெரில பா நீ வேற சும்மா எதனா சொல்லிக்கிட்டு திரியாத
குடும்பம்
ஓவியா குடும்பமாக இருப்போம் என்று சொன்னதை காப்பியடித்துவிட்டதாக ஓவியா ஆர்மிக்காரர்கள் ஆரவை கலாய்க்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











