சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம்.. இன்ஸ்டாகிராமில் வார்னிங் கொடுத்த நடிகை வனிதா!
சென்னை: சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம் என நடிகை வனிதா இன்ஸ்டாகிராமில் எச்சரிக்கும் வகையில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
நடிகை வனிதா விஜயக்குமார் கடந்த மாதம் 27 ஆம் தேதி பீட்டர் பால் என்ற விஷ்வல் எடிட்டரை காதலித்து மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் அவரது முதல் மனைவியான எலிசபெத் ஹெலன் தன்னை விவாகரத்து செய்யாமல் பீட்டர் இரண்டாவது திருமணம் செய்ததாக் கூறி வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

உண்டு இல்லை என..
இதனால் வனிதாவின் மூன்றாவது திருமணம் பெரும் சர்ச்சையானது. அதோடு பலரும் அவரது திருமணம் குறித்து சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். விமர்சித்தவர்களை எல்லாம் சமூக வலைதளங்களிலேயே உண்டு இல்லை என செய்தார் வனிதா.

போலீஸில் புகார்
குட்டி பத்மினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என விளாசினார். இதனால் அவர்கள் இருவரும் வனிதாவிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு ஒதுங்கினர். தொடர்ந்து தன்னுடைய திருமணத்தை பற்றி விமர்சித்ததாகவும் தன்னைப்பற்றி அவதூறு பேசியதாகவும் யூ டியூப் பிரபலமான சூர்யா தேவி மீதும் தயாரிப்பாளர் ரவீந்தர் மீதும் போரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார் வனிதா.

கெட்ட வார்த்தைகளால்..
இந்நிலையில்தான் ஊடகம் ஒன்றின் நேர்காணலில் பங்கேற்றனர் வனிதாவும் நடிகையும் இயக்குநருமான லக்ஷ்மி ராம கிருஷ்ணனும். அப்போது லக்ஷ்மி ராமகிருஷ்ணனை ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் கெட்ட வார்த்தைகளாலும் திட்டி தீர்த்தார் வனிதா.

டிவிட்டர் கணக்கு துண்டிப்பு
மேலும் அந்த வீடியோவையும் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டார் வனிதா. இதனால் அந்த வீடியோ வைரலானது. இதனை தொடர்ந்து வனிதாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் குவிந்தன. இதனால் சோஷியல் மீடியா மற்றும் மீடியாவை விட்டு விலகப் போவதாக கூறிய வனிதா டிவிட்டர் கணக்கை துண்டித்தார்.
Recommended Video

பெண் சிங்கம் உள்ளது
இருப்பினும் இன்ஸ்டாகிராமிலும் தனது யூட்யூப் சேனலிலும் ஆக்டிவாக உள்ள நடிகை வனிதா யாரையோ எச்சரிக்கும் வகையில் இன்ஸ்டாவில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார். அதாவது பெண் சிங்கத்தின் படம் மற்றும் கடவுளின் ஒவ்வொரு மகள்களின் உள்ளும் ஒரு பெண் சிங்கம் இருக்கிறது, அவள் எழுந்திருக்கும் நேரம் இது என்ற வாசகத்துடன் பகிர்ந்துள்ளார்.

கடமையை செய்ய வைப்போம்
மேலும் அந்த போட்டோவுக்கு சட்டம் தன் கடமையை செய்ய வைப்போம் என்றும் கேப்ஷன் கொடுத்துள்ளார். இது யாருக்கான எச்சரிக்கை என தெரியவில்லை. ஆனால் யார் மீது போலீஸில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்க வைக்கப்போவதை இதன்மூலம் தெரிவித்திருக்கிறார் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











