twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எதிராக பாலிவுட் கும்பல்.. நேரத்தை இழந்தால் ஒரு போதும் திரும்பி வராது.. ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்!

    By
    |

    சென்னை: அதை விட்டுவிடலாம், இன்னும் பெரிய விஷயங்கள் நம்முன் உள்ளன என்று இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

    தனக்கு எதிராக பாலிவுட்டில் ஒரு கும்பல் செயல்படுகிறது என்று கூறியிருந்ததை அடுத்து, இசைப் புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு சமூகவலைத்தளத்தில் ஆதரவு பெருகியது.

    கடந்த மாதம் தற்கொலை செய்துகொண்ட பிரபல நடிகர் சுஷாந்த் சிங் நடித்த கடைசி படம், தில் பெச்சாரா.

    பிரபல ஹீரோவின் படத்தை இசை அமைத்து தயாரிக்கும் ஏ.ஆர்.ரகுமான்.. ஆஸி, அமெரிக்காவில் ஷூட்டிங்! பிரபல ஹீரோவின் படத்தை இசை அமைத்து தயாரிக்கும் ஏ.ஆர்.ரகுமான்.. ஆஸி, அமெரிக்காவில் ஷூட்டிங்!

    பணியாற்ற விடாமல்

    பணியாற்ற விடாமல்

    இந்தப் படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் அமைத்துள்ளார். இதுபற்றி அவர் அளித்த பேட்டி ஒன்றில், 'பாலிவுட்டில் என்னை பணியாற்ற விடாமல் தடுக்க ஒரு கும்பல் வேலை செய்கிறது. தவறானச் செய்திகளைப் பரப்பி வருகிறது. தில் பெச்சாரா படத்துக்கு இசையமைக்க இயக்குநர் முகேஷ் சாப்ரா என்னிடம் வந்தார்.

    விதியின் மீது நம்பிக்கை

    விதியின் மீது நம்பிக்கை

    இரண்டு நாட்களில் அவரிடம் நான்குப் பாடல்களை கொடுத்தேன். அப்போது அவர் என்னிடம், பலர் உங்களிடம் போக வேண்டாம் என்று சொன்னார்கள். அவர்கள் பல கதைகளை சொன்னார்கள் என்று கூறினார். அப்போதுதான் இது எனக்குப் புரிந்தது. பரவாயில்லை. எனக்கு விதியின் மீது நம்பிக்கை இருக்கிறது. அனைத்தும் இறைவனிடமிருந்தே வருகிறது என்று நம்புபவன் நான். எனக்கு வரும் படங்களுக்கு இசை அமைத்து வருகிறேன் என்று கூறியிருந்தார்.

    ரசிகர்கள் குரல்

    ரசிகர்கள் குரல்

    இது பரபரப்பானது. இதையடுத்து ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக ரசிகர்கள் குரல் கொடுக்கத் தொடங்கினர். சமுக வலைதளங்களில் #ARRahman என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி ரசிகர்கள் டிரெண்டாக்கி வருகின்றனர். அதில் அவருக்கு ஆதரவாகப் பலர் காரசாரமான கருத்துக்களைத் தெரிவித்தனர். பலர் பாலிவுட்டை கடுமையாகச் சாடியுள்ளனர்.

    எதுவும் இல்லை

    எதுவும் இல்லை

    சிலர், ஆஸ்கர் விருது பெற்ற ஓர் இசை அமைப்பாளருக்கு இந்தி சினிமா இன்டஸ்ட்ரியில், நேர்கிற கதியை பாருங்கள். இதற்கு மேல் சொல்வதற்கு எதுவும் இல்லை. நீங்கள் (பாலிவுட்) அவருக்கும் அவர் இசைக்கும் தகுதியானவர்கள் இல்லை என்று கூறி இருந்தனர். சில சினிமா பிரபலங்களும் அவருக்கு ஆதரவான கருத்துக்களைத் தெரிவித்திருந்தனர்.

    ஆஸ்கர் விருது

    ஆஸ்கர் விருது

    பிரபல இயக்குனர் சேகர் கபூர், அந்தப் பேட்டியை ஏ.ஆர்.ரகுமானுக்கு டேக் செய்து, 'உங்கள் பிரச்னை என்னவென்று தெரியுமா? நீங்கள் சென்று ஆஸ்கர் விருதை பெற்றுவீட்டீர்கள். அது பாலிவுட்டுக்கு பலத்த தோல்வி. பாலிவுட்டை கையாள்வதை விட உங்களிடம் அதிக திறமை இருக்கிறது என்பதை இது நிரூபிக்கிறது என்று கூறியிருந்தார்.

    பல விஷயங்கள்

    பல விஷயங்கள்

    இதற்கு பதிலளித்துள்ள இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'பணத்தை இழந்தால் சம்பாதித்துவிடலாம், புகழையும் மீண்டும் பெற்றுவிடலாம். ஆனால், நம் வாழ்வின் முக்கிய நேரத்தை இழந்தால் அது ஒருபோதும் திரும்பி வராது. அமைதியாக இருங்கள். இதைவிட்டு விட்டு செல்லலாம். நாம் செய்வதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன' என்று கூறியுள்ளார்.

    English summary
    'Let's move on' A.R.Rahman tweet about spreading rumour issue
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X