த்ருவ் விக்ரம் சின்னப் பையன், பாவம் விட்டுடுங்க

By Siva

Recommended Video

Director Bala Given Notice to Vikram-காட்சிகளைப் பயன்படுத்தக் கூடாது-நடிகர் விக்ரம்ற்கு நோட்டீஸ்

சென்னை: ஆதித்ய வர்மா படத்தில் நடிப்பதால் த்ருவ் விக்ரம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியான அர்ஜுன் ரெட்டி படம் சூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை இயக்கிய சந்தீப் வாங்கா ரெட்டியே இந்தியில் ஷாஹித் கபூர், கியாரா அத்வானியை வைத்து கபிர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்தார்.

கடந்த மாதம் 21ம் தேதி வெளியான கபிர் சிங் இதுவரை ரூ. 240 கோடி வசூல் செய்துள்ளது. அர்ஜுன் ரெட்டியை விட சூப்பட் டூப்பர் ஹிட்டாகியுள்ளது கபிர் சிங்.

ஆதித்ய வர்மா

ஆதித்ய வர்மா

கபிர் சிங் படத்தில் ஷாஹித் கியாராவை அறைந்த காட்சியால் சர்ச்சை ஏற்பட்டது. மேலும் விமர்சகர்கள் கபிர் சிங் படத்தை கழுவிக் கழுவி ஊத்தியுள்ளனர். இருப்பினும் கபிர் சிங்கின் வசூல் கொஞ்சம் கூட பாதிக்கப்படவில்லை. இந்நிலையில் அர்ஜுன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கான ஆதித்ய வர்மா படத்தில் நம்ம விக்ரமின் மகன் த்ருவ் நடித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். மகனை ஹீரோவாக அறிமுகம் செய்து வைக்கும் படத்தை பார்த்து பார்த்து தேர்வு செய்தார் விக்ரம்.

த்ருவ் விக்ரம்

த்ருவ் விக்ரம்

அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளதால் அனைவரின் கவனமும் ஆதித்ய வர்மாவின் பக்கம் திரும்பியுள்ளது. திரையுலகில் அடி எடுத்து வைத்த உடனேயே த்ருவுக்கு பெரிய பொறுப்பு ஏற்பட்டுள்ளது. அர்ஜுன் ரெட்டியை பார்த்தவர்கள் கபிர் சிங்கை பார்த்தபோது ஷாஹித் கபூரின் நடிப்பை விஜய் தேவரகொண்டாவுடன் ஒப்பிட்டார்கள். இந்நிலையில் ஆதித்ய வர்மா ரிலீஸானால் த்ருவின் நடிப்பை விஜய் தேவரகொண்டா மற்றும் ஷாஹித் கபூருடன் ஒப்பிடுவார்கள். த்ருவுக்கு இது முதல் படம் என்பதை மறக்க வேண்டாம்.

முதல் படம்

முதல் படம்

ஆர்வத்துடன் நடித்துள்ள த்ருவை ஆதித்ய வர்மாவாக மட்டும் பார்ப்போமாக. அவரின் நடிப்பில் விஜய் தேவரகொண்டாவையோ, ஷாஹித் கபூரையோ தேட வேண்டாம். மேலும் அர்ஜுன் ரெட்டி, கபிர் சிங் போன்று ஆதித்ய வர்மாவில் அதிர்ச்சி அளிக்கும் காட்சிகள் இருக்காது என்று வாக்குறுதி அளித்துள்ளார் விக்ரம்.

பாலா

பாலா

வர்மா படம் கைவிடப்பட்டு அது ஆதித்ய வர்மா என்ற பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டுள்ளதாலும் படத்தை பார்க்கும் ஆவல் அதிகம் உள்ளது. இயக்குநர் பாலாவால் முடியாதது சந்தீப் வாங்கா ரெட்டியின் உதவியாளரான கிரிசாயாவால் எப்படி முடிந்தது என்பதை பார்க்கவும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X