கடவுளே, ரஜினி பற்றிய வதந்தி வதந்தியாகவே இருக்கட்டும்
Recommended Video

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பரவிய வதந்தி வதந்தியாகவே இருக்கட்டும்.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா என்று ரசிகர்கள் ஏங்கியபோது கண்டிப்பா வர்றேன் கண்ணா என்று அறிவித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். அறிவிப்பு இன்னும் அறிவுப்பு நிலையிலேயே உள்ளது.
இந்நிலையில் தான் ரஜினி பற்றி அந்த வதந்தி தீயாக பரவியது.

ரஜினி
ரஜினி தொலைக்காட்சி சேனல் ஒன்றை துவங்குகிறார். அதனால் அவர் அரசியலுக்கு வர இன்னும் ஓராண்டு கூட ஆகலாம் என்ற வதந்தி கண்டமேனிக்கு பரவியது. ரஜினி டிவி சேனல் ஆரம்பிக்கிறாரா என்று பலரும் வியந்தனர். ஆனால் அதில் உண்மை இல்லை என்பது பின்னர் தெரிய வந்தது.

வித்தியாசம்
ரஜினி மட்டும் டிவி சேனல் ஆரம்பித்தார் என்றால் அவரும் பத்தோடு பதினொன்றாவது அரசியல்வாதியாகிவிடுவார். ரஜினியின் தனித்தன்மையே அவர் யார் வழியிலும் செல்லாமல் என் வழி தன் வழி என்று செல்வது தான். அதை அவர் இழக்காமல் இருப்பது அவருக்கு பிளஸ் ஆகும். அந்த தனித்துவத்தால் தான் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது.

சூப்பர் ஸ்டார்
ரஜினி இன்று சூப்பர் ஸ்டாராக இருப்பதற்கு காரணம் அவர் யாரையம் காப்பியடிக்கவில்லை என்று அவரை வைத்து பல படங்களை இயக்கிய எஸ்.பி. முத்துராமன் தெரிவித்தார். சினிமாவில் யாரையும் காப்பியடிக்காத ரஜினி அரசியலிலும் அப்படியே இருந்தால் மக்கள் மகிழ்வார்கள். அவர் அரசியலுக்கு லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வருவார் என்ற நம்பிக்கை அவரின் ரசிகர்களுக்கு உள்ளது.

நண்பன்
சோலோ ஹீரோவாக நடிங்க ரஜினி என்று அவருக்கு ஐடியா கொடுத்த நண்பன் கமல் அரசியலுக்கு வந்தும் டிவி சேனல் துவங்கவில்லை. அவருக்கு அந்த ஐடியாவும் இல்லை. அரசியல்வாதியானாலே உடனே டிவி சேனல் துவங்க வேண்டும் என்று இல்லை என்பது ரஜினிக்கு நிச்சயம் தெரியும் என்று நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











