இன்று மாலை.. இன்னொரு மாஸ் பிரார்த்தனை.. விஜய்சேதுபதி முதல் யுவன் வரை அழைப்பு #LetsprayforSPB

சென்னை: இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய இன்னொரு மாஸ் பிரார்த்தனைக்கு பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

Recommended Video

SPB உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் - வீடியோ வெளியிட்ட எஸ்.பி.பி சரண்!

கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த வாரம் ரஜினிகாந்த், இளையராஜா, பாரதிராஜா உள்ளிட்ட பல பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் பாடு நிலா பாலு குணமடைய மாஸ் பிரார்த்தனை செய்தனர்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் சென்னையில் உள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். பின்னர், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ள செய்தியை அறிந்ததும் கோடிக்கணக்கான ரசிகர்களும் பிரபலங்களும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

கடுமையான போராட்டம்

கடுமையான போராட்டம்

செயற்கை சுவாசக் கருவிகள் உதவியால் தான் எஸ்.பி. பாலசுப்ரமணியம் இயங்கி வருகிறார் என்ற செய்தி இடியாய் பலரது இதயங்களிலும் இறங்கியது. கொரோனாவுடன் கடுமையான போராட்டம் நடத்தி வந்த நிலையில், தற்போது 90 சதவீதம் மயக்க நிலையில் இருந்து மீண்டுள்ளார் என்ற சந்தோஷ செய்தியை அவரது மகன் சரண் கூறியிருந்தார்.

மாஸ் பிரார்த்தனை

மாஸ் பிரார்த்தனை

கடந்த வாரம் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைய வேண்டும் என ரஜினிகாந்த், கமல்ஹாசன், பாரதிராஜா, பார்த்திபன், இளையராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், சிரஞ்சீவி, நிவின் பாலி, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி என ஏகப்பட்ட திரைப் பிரபலங்கள் ஒன்று திரண்டு மிகப்பெரிய மாஸ் பிரார்த்தனைக்கு அழைப்பு விடுத்தனர்.

வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி

வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி

16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள இசை அரசன் பாடு நிலா பாலு உடல் நலம் பெற்று குணமாக வேண்டும் என பிரபலங்களுடன் பல்லாயிரக் கணக்கான மக்கள் ஒன்று திரண்டு, வீதிகளில் மெழுகுவர்த்தி ஏந்தி மிகப்பெரிய பிரார்த்தனையை ஜாதி, மத பேதமின்றி நடத்தினர்.

இன்று மாலை 6 மணிக்கு

இன்று மாலை 6 மணிக்கு

இந்நிலையில், மீண்டும் ஒரு மாஸ் பிரார்த்தனையை நடத்த பிரபலங்கள் முடிவு செய்துள்ளனர். இன்று மாலை 6 மணி முதல் 6.05 வரை எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என மக்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும் என #LetsprayforSPB என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி விஜய்சேதுபதி, யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட பிரபலங்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X