LGM First Single - தோனி தயாரிக்கும் எல்ஜிஎம்.. கலக்கலான முதல் சிங்கிள் வெளியானது

சென்னை: LGM First Single (எல்ஜிஎம் முதல் சிங்கிள்) தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடித்திருக்கும் எல்ஜிஎம் படத்தின் முதல் சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான மகேந்திர சிங் தோனிக்கு தமிழ்நாட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அவரும் தமிழ்நாடு தனக்கு இரண்டாம் தாய் வீடு என பலமுறை கூறியிருக்கிறார். இந்தச் சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனி திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியிருக்கிறார். இதனால் தோனி ரசிகர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

LGM Movies first was Released and got huge Response From fans

தோனி தயாரிக்கும் முதல் தமிழ் படம்: தோனி படம் தயாரிக்கப்போகிறார் என தெரியவந்ததும் அவர் எந்தப் படத்தை முதலில் தயாரிக்கவிருக்கிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. தமிழ்நாடு மீது தனக்கு இருக்கும் அன்பை உறுதிப்படுத்தும் விதமாக முதல் படத்தை தமிழில் தயாரிக்கிறார். தோனி என்ட்டெர்டெயின்மென்ட் தயாரிக்கும் தமிழ் படத்துக்கு லெட்ஸ் கெட் மேரிட் (LGM) என்று பெயரிடப்பட்டுள்ளது.

படத்தில் யார் யார்?: தோனி தயாரிக்கும் லெட்ஸ் கெட் மேரிட் படத்தில் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார். லவ் டுடே படத்தில் நடித்து 2கே கிட்ஸ்களின் பேவரைட்டாக இருக்கும் இவானா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் யோகிபாபு, நதியாஉள்ளிட்டோரும் நடிக்கின்றனர். குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக உருவாகியுள்ளது. ரமேஷ் தமிழ்மணி என்ற புதுமுக இயக்குநர் படத்தை இயக்க அவரே படத்துக்கு இசையும் அமைத்திருக்கிறார்.

ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்: லெட்ஸ் கெட் மேரிட் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தோனி தனது அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் அண்மையில் வெளியிட்டிருந்தார். அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரானது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சமீபத்தில் வெளியான எல்ஜிஎம் படத்தின் டீசரும் சமூக வலைதளங்களில் லைக்ஸை குவித்தது.

LGM Movies first was Released and got huge Response From fans

வரவேற்பைப் பெற்ற ஃபர்ஸ்ட் சிங்கிள்: இந்நிலையில் படத்தின் முதல் சிங்கிளான சலானா பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகியிருக்கிறது. பாடலாசிரியர் மதன் கார்க்கி பாடலை எழுத ஆதித்யா ஆர்.கே பாடியிருக்கிறார். பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்திருக்கிறார். தற்போது இந்தப் பாடலானது ரசிகர்களை கவர்ந்து இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகவிருக்கிறது.

கிரிக்கெட் வீரர்கள் சினிமாவில் கவனம் செலுத்துவது சமீபகாலமாக அதிகரித்துள்ளது. அதேபோல் கிரிக்கெட் தொடர்பான படங்களும், கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை வரலாறும் திரைப்படங்களாக உருவாக்கப்படுகின்றன. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், இர்ஃபான் பதான் உள்ளிட்டோர் தமிழ் படங்களில் நடித்து ஆச்சரியப்படுத்தினர். தமிழில் இப்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகிவரும் லால் சலாம் படம்கூட கிரிக்கெட் சம்பந்தப்பட்டதுதான். அந்தப் படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X