பாவம் விக்னேஷ் சிவன்.. LIC படத்திற்கு வந்த சிக்கல்.. படக்குழு என்ன முடிவு எடுக்கும்!

சென்னை: செவன் ஸ்கிரீன் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் LIC நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் இப்படத்தில், கீர்த்தி செட்டி, எஸ்.ஜே சூர்யா, யோகி பாபு உட்பட பலரும் கமிட்டாகி உள்ளனர். இப்படத்திற்கு பூஜை போடப்பட்ட நிலையில், முதற்கட்டமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் இந்த படத்திற்கு தற்போது சிக்கல் வந்துள்ளது.

நானும் ரௌடிதான் என்ற மாஸ் ஹிட் படத்தை கொடுத்த விக்னேஷ் சிவன் மீண்டும் விஜயசேதுபதி, நயன்தாரா,சமந்தாவை வைத்து காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கினார். அந்த படத்தின் தலைப்புக்கு ஏற்ற போலவே காத்து வாக்குலன ரெண்டு வந்து கதீஜாவா... கண்மணியா என ரசிகர்களை குழப்பியது. இந்த படம் தியேட்டரில் வெளியாகி வசூலை அள்ளியது.

LIC notice against Vignesh Shivans LIC film title

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்துக்கு பிறகு, இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தை வைத்து ஏகே 62 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விக்னேஷ் சிவன் சொன்ன கதை, அஜித்திற்கு பிடிக்காததால் அவர் நோ சொல்லிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், தனது கணவருக்காக நயன்தாராவே அஜித்திடம் பேசியதாகவும், அதற்கும் அஜித் ஒத்துவரவில்லை. தற்போது, அஜித் 62 படம் விடாமுயற்சி என்ற பெயரில் மகிழ் திருமேனி இயக்கிவருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடந்து வருகிறது.

லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்: இதையடுத்து, விக்கி இயக்குனரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து எல்ஜிசி (லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்) என்ற பெயரில் படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் பூஜை டிசம்பர் 15ந் தேதி போடப்பட்டது. இந்த பூஜையில், லலித் குமார், இயக்குனர் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், நடிகை கீர்த்தி ஷெட்டி ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்கா கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். இந்த படத்திற்கு அனிரூத் இசையமைப்பை உள்ளார். லவ் டுடே படம் போலவே இப்படமும், இளம் ரசிகர்களை கவரும் வகையில் காதல் கதை அம்சத்தை கொண்ட கதையாகும்.

எல்ஐசி படத்திற்கு வந்த சிக்கல்: இந்த நிலையில் எல்ஐசி படத்தின் பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்து எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விக்னேஷ் சிவன் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்க்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்ற தலைப்பை படத்துக்கு பயன்படுத்துவதை நிறுத்தக்கோரி எல்.ஐ.சி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நோட்டீஸ் பெற்ற 7 நாட்களுக்குள் படத்தின் பெயரை மாற்றாவிட்டால் உரிமையியல், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீசில் தெரிவித்துள்ளதால், படத்துக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.

ஏற்கனவே பிரச்சனை: எல்ஐசி படத்திற்கு ஏற்கனவே இயக்குநர் எஸ் எஸ் குமார் என்பவர் எல்ஐசி படத்தின் தலைப்பு என்னுடையது என்று உரிமைகோரி இருந்தார். கடந்த பத்து ஆண்டுகளாக எல்ஜிசி என்ற புதுப்பித்து பாதுகாத்து வந்தேன். இந்த படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் நடத்த திட்டமிட்டு இருந்தேன். இதற்குள் விக்னேஷ் சிவன் இந்த தலைப்பை வைத்து பூஜை போட்டுவிட்டார் என்றார். மேலும், இதுகுறித்து தயாரிப்பாளர் சங்கத்திலும் புகார் கொடுத்து இருக்கிறேன், என்னிடம் படத்தின் தலைப்புக்கான அனைத்து ஆதரரங்களும் உள்ளது என்று புகார் கூறியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X