LIC: பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாகும் கீர்த்தி ஷெட்டி... பூஜையுடன் தொடங்கிய LIC ஷூட்டிங்!
சென்னை: பிரதீப் ரங்கநாதன் - விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவாகும் LIC படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இந்த பூஜை விழாவில் எஸ்ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி, அனிருத் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
பூஜையுடன் தொடங்கியது LIC பட ஷூட்டிங்: கோமாளி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், அடுத்து இயக்கிய லவ் டுடே மூவி மூலம் செம்ம மாஸ் காட்டினார். அவரே ஹீரோவாக நடித்த லவ் டுடே திரைப்படம், ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. மேலும், பாக்ஸ் ஆபிஸிலும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. இதனையடுத்து பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்தடுத்து பல வாய்ப்புகள் கிடைத்தன.

இந்நிலையில் விக்னேஷ் சிவனுடன் இணைந்தார் பிரதீப். அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்கவிருந்த விக்னேஷ் சிவன், அந்த ப்ராஜெக்ட் கை நழுவிப் போனதால் அடுத்த படத்துக்கு ரெடியாகிவிட்டார். அதன்படி, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்கும் படத்தை செவன் ஸ்க்ரீன் லலித் குமார் தயாரிக்கிறார். மேலும் படத்துக்கு LIC என, அதாவது லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு அக்காவாக நயன்தாரா நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. அதேபோல் பிரதீப் ஜோடியாக பாலிவுட் நடிகையை களமிறக்க விக்னேஷ் சிவன் முடிவு செய்திருந்ததாக செய்திகள் வெளியாகின. ஆனால், தற்போது டோலிவுட் இளம் நாயகி கிருத்தி ஷெட்டி கமிட்டாகியுள்ளார். மேலும், LIC படத்தில் முக்கியமான கேரக்டரில் எஸ்ஜே சூர்யா நடிக்கவுள்ளார். அதேபோல், அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், LIC படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் தொடங்கியது. இதில் விக்னேஷ் சிவன், பிரதீப் ரங்கநாதன், எஸ்ஜே சூர்யா, கிருத்தி ஷெட்டி, அனிருத், லலித் குமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். மேலும் தனது புதிய பயணம் தொடங்கியதாகவும் அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார்.

லவ் ப்ளஸ் ரொமான்ஸ் பின்னணியில் 2கே கிட்ஸ்களுக்கான படமாக LIC இருக்கும் என சொல்லப்படுகிறது. விரைவாக நடக்கவுள்ள LIC படத்தின் ஷூட்டிங், அடுத்தாண்டு சம்மருக்குள் முடிந்துவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனைத் தொடர்ந்து LIC ரிலீஸ் தேதியை படக்குழு அறிவிக்க உள்ளதாம்.


Click it and Unblock the Notifications











