நான் சரக்கு அடிச்சிருக்கேன்.. செட் ஆகல.. விட்டுட்டேன்.. மனம் திறந்த பாரதிராஜா
சென்னை : இயக்குனர் பாரதிராஜா, யூடியூப் வாயிலாக தனது வாழ்கை அனுபவத்தை பகிர்ந்து வருகிறார்.
இயக்குனர் பாரதிராஜா 16 வயதினிலே படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகி அதன்பின் மிக பெரிய இயக்குனராக உருவாகினார். அன்றைய காலத்தில் இருந்த பல சினிமா விதிகளை உடைத்தெரிந்து படங்களை இயக்கியவர் பாரதிராஜா. இயக்குனராக பல சாதனைகளை புரிந்த இவர் தற்போது படங்கள் இயக்குவதை குறைத்து விட்டார். சமீபத்தில் மீண்டும் ஒரு மரியாதை எனும் படத்தை இயக்கிய பாரதிராஜா. தற்போது யூடியூப் வாயிலாக தனது வாழ்கை அனுபவத்தை பகிர்ந்து வருகிறார் .
தற்போது பாரதிராஜா ஒரு காணொளியில் தான் சாராயம் குடித்த முதல் அனுபவத்தை பற்றி பகிர்ந்து உள்ளார். ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது இரவு நேரத்தில் ஒரு ஓடைக்கு அருகே நிலா வெளிச்சத்தில் நண்பர்கள் தான் முதல்முதலாக சாராயம் குடிக்க அறிமுகப்படுத்தினார்கள். ஆனால் குடித்த மறுநாளே ஏன் குடித்தேன் என்று வெகுவாக யோசித்து அதில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியுள்ளார் .

இதற்கு முன்பு வரை சாராயத்தை எங்க ஊரில் பரட்டையன் என்ற ஒருவன் குடித்து பார்த்து இருக்கிறேன். அதனால் தான் எனது, 16 வயதினிலே படத்தில் ரஜினியின் கதாபாத்திர பெயரை பரட்டையன் என்று வைத்தேன் என்று கூறினார் .

மேலும் சினிமாவில் கீழ் ஜாதி, மேல் ஜாதி சமயம் என்று பல்வேறு பிரிவினைகள் இருக்கிறது அதை நான் அறவே வெறுக்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும் என் படங்களில் ஒரு விசயம் தேவைப்படும் போது கூட வெகுவாக ஜாதி சமய வசனங்களை வைக்க யோசித்திருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா தொடர்ந்து தன் வாழ்வில் நடந்த பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து வருகிறார். அதை தாண்டி இன்றைய இளம் கலைஞர்களுக்கு பாரதிராஜாவின் வரலாறு வெகு உதவிகரமாக இருக்கிறது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பாரதிராஜா இறுதியாக குற்றப்பரம்பறை வரலாற்றை எடுக்க உள்ளதாக பல முறை கூறியிருக்கிறார். அந்த அறிவிப்பு எப்போது வரும் என்று பலரும் காத்திருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











