twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சாருஹாசனுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’

    |

    சென்னை: பழம் பெரும் நடிகர் சாருஹாசனுக்கு'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கப்பட உள்ளது. 120 படங்களுக்கு மேல் நடித்துள்ள அவரின் கலையுலக பங்களிப்பை பாராட்டி அவரை கௌரவிக்கும் விதமாக சர்வதேச திரைப்பட விழாவில் இவ்விருது வழங்கப்பட உள்ளது.

    17வது சர்வதேச திரைப்படவிழா டிசம்பர் 12 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. உலக சினிமாவின் நாயகனாக விளங்கும் கமலஹாசனின் மூத்த சகோதரரான சாருஹாசனை பாராட்டி 'வாழ்நாள் சாதனையாளர் விருது'வழங்கப்பட உள்ளது.

     Life time Achievement Award

    சிறுவயது முதலே திரைப்படங்களின் மேல் இவருக்கு இருந்த ஆர்வம் இவரை நடிகராக்கியது. தமிழ், தெலுங்கு,மலையாளம் கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்த ஒரு பழம்பெரும் நடிகர் மற்றும் இயக்குநராவார்.

    தொலைக்காட்சி நடிகராகவும் நடித்து வந்த சாருஹாசன் ஒரு வழக்கறிஞராவார். சினிமா மீது இவருக்கு இருந்த ஆசையால் நடிகரானார். இவர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளை கொண்டு திறமைகளை வெளிபடுத்தி தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தார்.

    உதிரிபூக்கள் படம் மூலமாக அறிமுகமான சாருஹாசன் குணசித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து தமிழ் சினிமாவின் அடையாள மிக்க நடிகராக மாறினார்.

    மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்மீண்டும் இணையும் திரில்லர் கூட்டணி.. 'ஏவி31' படப்பிடிப்பு ஆரம்பம்

    சுமார் 120 படங்களுக்கு மேல் நடித்துள்ள சாருஹாசனுக்கு தமிழில் வேதம் புதிது, தளபதி போன்ற படங்கள் முக்கிய திருப்புனை படங்களாகும். மேலும் IPC 215, புதிய சங்கமம் போன்ற படங்கள் இயக்கி இயக்குநராகவும் திரைத்துறையில் மின்னினார். 1986ல் கன்னடத்தில் வெளியான 'தபாரனா கதே' திரைப்படத்திற்காக தேசிய விருதும், கர்நாடக அரசின் சிறந்த நடிகருக்கான விருதும் பெற்றவர்.

    சமீபத்தில் வெளிவந்த 'தாதா 87' படத்தில் தாதா வேடத்தில் நடித்து அசத்தினார். 90 வயதிலும் நடித்து வரும் ஒரே கலைஞன் சாருஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Life time Achievement Award will be given to veteran actor Charuhaasan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X